ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் திடீர் நீக்கம்.. அடுத்தது கல்தா?

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள காமன்வெத் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் சர்தார் சிங், ரமன்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இதில் சர்தார் சிங், இனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இனி இல்லை என்றே கூறப்படுகிறது.

காமன்வெத் போட்டிகள், அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடக்க உள்ளது. இதற்காக, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த அஸ்லான் ஷா கோப்பை போட்டி அதற்கு முன், நியூசிலாந்தில் நடந்த தொடர்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த, கேப்டன் சர்தார் சிங் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு நடக்க ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பை போட்டி, 2020 ஒலிம்பிக் போட்டிகளை மனதில் கொண்டு, கடந்த பல மாதங்களாக அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வந்தார் கோச் ஜோயர்டு மரிஜ்னே.

அனைவருக்கும் வாய்ப்பு

அனைவருக்கும் வாய்ப்பு

ஒவ்வொரு போட்டிக்கும் தனி தனி அணிகளை அனுப்பி வைத்து, ஒவ்வொரு வீரருக்கும் வாய்ப்பு அளித்து வந்தார். ஆறு நாடுகள் பங்கேற்ற அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணி 5வது இடத்தைப் பிடித்தது. காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, உலகக் கோப்பை, 2020 ஒலிம்பிக் என, தொடர்ந்து முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பரிசோதனைகள் முடிந்து, இனி வீரர்களைத் தயார்படுத்த கோச் மரிஜ்னே தயாராகி உள்ளார்.

அணியில் சர்தார் இல்லை

அணியில் சர்தார் இல்லை

அதுவே தற்போதைய அணித் தேர்வு காட்டுகிறது. இந்திய ஹாக்கி சந்தித்துள்ள மிகச் சிறந்த நடுகள வீரர்களில் ஒருவரான 31 வயதாகும் சர்தார் சிங், சமீபகாலமாக சரியான முறையில் சோபிக்கவில்லை. அதே நேரத்தில் அனுபவமிக்க சிங்லென்சனா, மன்பிரீத் சிங், இளம் வீரர்கள் விவேக் சாகர் பிரசாத், சுமித் ஆகியோர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சர்தாரை நீக்க காரணம் என்ன

சர்தாரை நீக்க காரணம் என்ன

அதனால் சர்தார் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். `இந்திய ஹாக்கி அணியின் பலம் அதன் வேகம்தான். சர்தார் சிங்கின் வேகம் குறையவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் அவரைவிட வேகத்துடன் உள்ளனர்' என்கிறார் மரிஜ்னே. கடந்த சில மாதங்களாகவே, சர்தார் சிங் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. தற்போதைய அணியில் அவர் இடம் பெறவில்லை. அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு அவருக்கு இனி கிடைப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

ரமன்தீப் நீக்கத்துக்கு காரணம்

ரமன்தீப் நீக்கத்துக்கு காரணம்

24 வயதாகும், முன்கள வீரரான ரமன்தீப் சிங் நீக்கப்பட்டதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `ரமன்தீப் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தன்னுடைய பார்முக்கு திரும்ப வேண்டும்' என்கிறார் மரிஜ்னே. காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி:

கோல் கீப்பர்கள் - பி.ஆர். ஸ்ரீஜேஷ், சூரஜ் கார்கேரா.

தடுப்பாட்டக்காரர்கள் - ருபிந்தர் பால் சிங், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், கோத்தாஜித் சிங் கடங்க்பாம், குரிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ்.

நடுகள வீரர்கள் - மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் கங்குஜம் (துணைக் கேப்டன்), சுமித், விவேக் சாகர் பிரசாத்.

முன்கள வீரர்கள் - ஆகாஷ்தீப் சிங், எஸ்வி சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங்.

Story first published: Wednesday, March 14, 2018, 14:24 [IST]
Other articles published on Mar 14, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற