For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரதோடுக்கு வேலை வந்தாச்சு..!

By Staff

டெல்லி: நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக முதல் முறையாக ஒரு விளையாட்டு வீரர் நியமிக்கப்பட்டுள்ளது பெருமையான விஷயம்தான்.

அமைச்சராக பொறுப்பேற்ற உடன், துப்பாக்கி சுடுதல் முன்னாள் வீரரான ராஜ்யவர்தன் சிங் ரதோடுக்கு முதல் வேலை வந்தாச்சு. உடனடியாக, ஐசியு.வில் உள்ள ஹாக்கி அணி நிர்வாகத்துக்கு டிரிப்ஸ் கொடுத்து, உயிர் பிழைக்க வேண்டிய மிகப் பெரிய பணி அவருக்காக காத்திருக்கு.

hockey india needs urgent treatment

ஒரு காலத்தில்' என்று சொல்லக் கூடிய அளவுக்கு, இந்தியாவின் தேசிய விளையாட்டின் பெருமை மங்கி போய்விட்டது. தயான் சந்தின் பிறந்தநாளை, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுவது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கொடிகட்டி பறந்த ஹாக்கி விளையாட்டில், நாட்டின் மானம் அல்லோலகலப்பட்டு போயுள்ளது.

கடந்த, 23 ஆண்டுகளில் 23 கோச்களை இந்திய ஹாக்கி அணி பார்த்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ், சமீபத்தில் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு பயிற்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லாததால், வெளிநாட்டில் இருந்து பயிற்சியாளரை வரவழைத்து பார்த்தனர். ஆனால், கடந்த, 4 ஆண்டுகளில் மட்டும், 4 வெளிநாட்டு பயிற்சியாளர்களும், விஜயகாந்த் பாணியில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுடைய ஒப்பந்த காலத்துக்கு முன்பே விரட்டியடிக்கப்பட்டுள்ளது, ஹாக்கி நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுவரை, வெளிநாட்டைச் சேர்ந்த, 6 பேர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நோப்ஸ், டெர்ரி வால்ஷ். ஹாலந்தின் பால் வான் ஆஸ் ஆகியோருடன் தற்போது, ஓல்ட்மான்ஸ், கடந்த நான்கு ஆண்டுகளில் பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் போட்டிகளில் பங்கேற்ற, 10 அணிகளில், இந்தியா, 6வது இடத்தைப் பிடித்ததே, ஓல்ட்மான்ஸ் நீக்கத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

“இந்திய ஹாக்கி அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒன்று, விளையாடும் அனைத்து வீரர்களையும் மாற்ற வேண்டும் அல்லது பயிற்சியாளரை மாற்ற வேண்டும். இதில் பயிற்சியாளர்தான் மாட்டிக் கொள்கிறார்" என்று ஹாக்கி அணியின் டைரக்டர் டேவிட் ஜான் கூறியுள்ளார்.

ஹாக்கியில் ஒலிம்பிக்கில், 8 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ள இந்திய அணி, மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு அணியின் செயல்பாடு மோசமா அல்லது நிர்வாக குளறுபடிகளா என்பதை கண்டுபிடித்து, இழந்த பெருமையை மீட்கும் மிகப் பெரிய வேலை, ரதோடுக்கு வந்தாச்சு. என்ன செய்யப் போகிறார் என்பதை பார்ப்போம்.

Story first published: Monday, September 4, 2017, 15:57 [IST]
Other articles published on Sep 4, 2017
English summary
Hockey India needs urgent attention from the new Union Sports minister Rajyavardhan Rathore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X