For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கியில் இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கணக்கில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணிக்கு இது 3-வது தொடர் தோல்வியாகும்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிப்பிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்ற நிலையில், தற்போது தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

Indian women hockey team loses to USA by 0-3

குரூப்பில் 'பி'-யில் உள்ள இந்திய அணி. முதலில் ஜப்பானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதயடுத்து பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நடந்த ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.

இந்நிலையில், 4-வது போட்டியில் இந்திய அணி, அமெரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய அமெரிக்கா 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அமெரிக்க அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த அணியால் பெனால்ட்டி கார்னர் வாய்ப்பில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அமெரிக்க அணியில் காத்லீன் பம் 14-வது மற்றும் 42-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்தார். 52-வது நிமிடத்தில் மெலிஸ்ஸா ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி குரூப் 'பி' பிரிவில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 1 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 6-வது இடம் பிடித்து கடைசியில் உள்ளது.

இந்திய அணி அடுத்ததாக அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் காலிறுதிக்கு செல்வதற்காக வாய்ப்பு ஏற்படலாம்.

Story first published: Friday, August 12, 2016, 13:16 [IST]
Other articles published on Aug 12, 2016
English summary
The Indian women's hockey team continued their dismal campaign at the ongoing Rio Olympics, suffering a 0-3 defeat to US in a Pool B.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X