ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதும் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் உயிர் வாழ்வதே அதிசயம்.. மீண்டும் நடப்பேனானு தெரியாது! - மரண படுக்கையில் கிரிக்கெட் வீரர் நான் உயிர் வாழ்வதே அதிசயம்.. மீண்டும் நடப்பேனானு தெரியாது! - மரண படுக்கையில் கிரிக்கெட் வீரர்

அணியின் கேப்டன் :

அணியின் கேப்டன் :

டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி மகளிர் அணி 4வது இடத்தை பிடித்தது.இதன் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி அதீத கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ஒலிம்பிக் போட்டியில் சீனியர் அணியில் இடம்பெற்றிருந்த லால்ரேம்சியாமி நியமிக்கப்பட்டுள்ளார். டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சலிமா,சர்மிளா ஆகியோர் ஜூனியர் உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளனர்

அணி விபரம்:

அணி விபரம்:

ஜூனியர் அணியில் பிச்சு தேவி, குஷ்பு, அக்‌ஷதா, பிரியங்கா,மரினா, அஜ்மினா, பல்ஜீட் கவுர், ரீட்,வைஷ்ணவி,பியூடி டங், தீபிகா,மும்தாஜ் கான், சங்கீதா, ஜிவான் ஆகிய இளம் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். மாற்று வீராங்கனைகளாக பிரித்தீ, பிராப்லேன் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவமும், இளம் வீராங்கனைகளும் கலந்த கலவையாக அணி உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அட்டவணை:

அட்டவணை:

சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தனது முதல் போட்டியில் ரஷ்யாவை வரும் 6ஆம் தேதி எதிர்கொள்கிறது. வரும் 7ஆம் தேதி நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவையும், 9ஆம் தேதி ஜப்பானையும் எதிர்கொள்கிறது. நாக் அவுட் சுற்று போட்டிகள் வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவின் செயல்பாடு

இந்தியாவின் செயல்பாடு

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இதே போல் இம்முறையும் இந்தியா பதக்கம் வென்று, இந்த தொடரில் களமிறங்கும் வீராங்கனைகள் சீனியர் அணியில் இடம்பிடித்து அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
18 Players were selected for Team India to Participate in junior world cup hockey..
Story first published: Monday, November 15, 2021, 20:13 [IST]
Other articles published on Nov 15, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X