For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க வேட்டை ரம்யா கிருஷ்ணனாகும் மகளிர் ஹாக்கி அணி

By Srividhya Govindarajan

டெல்லி: அடுத்த மாதம் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று வருவோம் என, இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. இதில் மகளிர் ஹாக்கியில், இந்தியா, ஏ பிரிவில், மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. 5ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை இந்திய அணி சந்திக்க உள்ளது.

Women hockey team on Gold quest


இதற்காக, ராணி ராம்பால் தலைமையிலான, 18 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 200 போட்டிக்கு மேல் விளையாடியுள்ள அனுபவமிக்க கோல் கீப்பர் சவிதா, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகத் தரவரிசையில், 10வது இடத்தில் உள்ள இந்திய அணி, 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது. 2006ல் வெள்ளி வென்றது. 2010 மற்றும் 2014ல் ஐந்தாவது இடத்தையே பிடித்தது.

ஆனால், தற்போதுள்ள அணி, அனுபவம் மற்றும் இளம் வீராங்கனைகளை கொண்டுள்ளது. கடந்தாண்டு, ஆசியக் கோப்பையை வென்றது. சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த 5 போட்டித் தொடரில், 3-1 என்று வென்றுள்ளது.

இந்த அணி பதக்கம் வென்று வரும் என்று கோச் ஹரீந்தர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பதக்கம் என்ன, தங்கப் பதக்கத்தையே வென்று வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராணி. ஆல் த பெஸ்ட் சொல்லி அனுப்புவோம்.

அணி விவரம்:

சவிதா (துணை கேப்டன், ரஜனி அடிமார்பு, தீபிகா, சுனிதா லாக்ரா, தீப் கிரேஸ் ஏக்கா, குர்ஜித் கவுர், சுசிலா சானு புக்ரம்பம், மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லிலிமா மின்ஸ், ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கடாரியா, லால்ரேம்சியாமி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், பூனம் ராணி.
Story first published: Thursday, March 15, 2018, 11:42 [IST]
Other articles published on Mar 15, 2018
English summary
Women hockey team announced for CWG
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X