For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்வீட் எடு கொண்டாடு... பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

By Staff

கோர்கான்: ஈரானில் நடந்த ஆசியன் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியனானது. இரண்டாவது ஸ்டவீட்டை எடுங்க. மகளிர் பிரிவிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆசியன் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரானின் கோர்கான் நகரில் நடந்தன. இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடந்த பைனலில், பாகிஸ்தான் அணியை 36-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இந்திய அணி வென்றது.

சமீபத்தில் நடந்த புரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனான அஜய் தாக்குர் தலைமையிலான இந்திய அணி, இந்த ஆசியன் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

தோல்வியே இல்லை

தோல்வியே இல்லை

முதலில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 44-18 என்ற கணக்கில் அடித்து தூள் கிளப்பியது. முன்னதாக முதல் லீக் ஆட்டத்தில் ஈராக் அணியை 61-21 என்ற கணக்கில் வென்றது.

ஜப்பானை கும்மியது

ஜப்பானை கும்மியது

பின்னர் மூத்திர சந்தில் ஒரு கும்பலே அடித்து பிழிந்தது போல், ஜப்பானை 82-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. எவ்வளவு அடி விழுந்தது என்பதை கணக்குகூட பார்க்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 103-25 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அரை இறுதியில் தென் கொரியாவை 45-29 என்ற கணக்கில் வென்றது.

தலைவாஸின் அபார ஆட்டம்

தலைவாஸின் அபார ஆட்டம்

லீக் போட்டியில் தோற்றதற்கு பழிவாங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணி, நேற்று நடந்த பைனலில் களமிறங்கியது. ஆனால், கடைசியில் சின்னம் இழந்த கோஷ்டியானது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குரின் அபாரமான ஆட்டத்தில், பாகிஸ்தான் காணாமல் போனது. 36-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய மகளிர் சாம்பியன்

இந்திய மகளிர் சாம்பியன்

நீங்க மட்டும்தான் ஜெயிப்பீங்களா, எங்களுடைய ஆட்டத்தையும் பாருங்க என்று, மகளிர் அணியும் தூள் கிளப்பியது. ஆஹா நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்க விட்டு விடக் கூடாது என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் குதூகலத்தில் உள்ளது போல, மகளிர் அணியும் தூள் கிளப்பியது. பைனலில், தென் கொரியாவை 42-20 என்ர கணக்கில் வென்று ஆசியன் கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது

Story first published: Monday, November 27, 2017, 16:03 [IST]
Other articles published on Nov 27, 2017
English summary
India wins double title in Asian Kabaddi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X