For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியலில் குதித்த பிரபல விளையாட்டு வீரர்கள்!

By Mayura Akilan

உலக அளவில் பிரபலமடையவும், புகழ் பெறவும் உள்ள துறை விளையாட்டு. மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களின் ஓய்விற்குப் பின்னர் அரசியலை தேர்வு செய்கின்றனர்.

உலகம் முழுவதுமே பல பிரபலமான விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழைந்து அங்கும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

ஆனால், அரசியல் வாழ்க்கை அனைவருக்குமே கைவந்து விடாது. சிலருக்கு வெற்றியை பரிசளிக்கும்... சிலர் தோல்வியை சந்திப்பார்கள். விளையாட்டில் சாதித்த பிரபலங்கள் அரசியலில் சாதித்தார்களா? மேற்கொண்டு படியுங்கள்

மன்சூர் அலிகான் பட்டோடி

மன்சூர் அலிகான் பட்டோடி

மறைந்த மன்சூர் அலிகான் பட்டோடி வெளிநாட்டு மண்ணில் முதல் வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 1971 மற்றும் 1991-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார்

கீர்த்தி ஆசாத்

கீர்த்தி ஆசாத்

பீகார் மாநில முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆசாத்தின் மகன் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவர். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2-வது முறையாக அவர் தற்போது எம்.பி.யாக உள்ளார்.

முகமது அசாருதீன்

முகமது அசாருதீன்

50 வயதான முகமது அசாருதீன் இந்தியாவின் வெற்றி கேப்டன்களில் ஒருவராவர். 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இவர் சேர்ந்தார். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார்.

நவ் ஜோத் சிங் சித்து

நவ் ஜோத் சிங் சித்து

கிரிக்கெட் விளையாடிய காலங்களில் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். தற்போது அனைவருக்கும் தெரிந்த வர்ணனையாளர் ஆவார். 2004-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் நின்று போட்டியிட்டு அமிர்தரஸ் தொகுதி எம்.பி.யானார்.

சேட்டன் சவுகான்

சேட்டன் சவுகான்

கவாஸ்கருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடிவர் சேட்டன் சவுகான். பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இவர் எம்.பி.யாக 2 முறை தேர்ந்து எடுக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதியில் 1988 மற்றும் 1991 தேர்தலில் வெற்றி பெற்றார்.

மனோஜ் பிரபாகர்

மனோஜ் பிரபாகர்

முன்னாள் ஆல்ரவுண்டரான மனோஜ் பிரபாகர் 39 டெஸ்ட் மற்றும் 130 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். பாராளுமன்ற தேர்தலில் தோற்றார்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

நட்சத்திர வீரர் டெண்டுல்கர் டெல்லி ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய சாதனையாக்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது. இந் நிலையில் அவர் இப்போது காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

அனில் கும்ளே

அனில் கும்ளே

கிரிக்கெட்டில் பிரபல சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ளே தற்போது அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் பெங்களுர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இம்ரான்கான்

இம்ரான்கான்

1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான்கான். ஆல்ரவுண்டரான அவர் சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார். அங்கு தெரிக்-இ-இன்ஷாப் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

அர்ஜூன ரனதுங்கா

அர்ஜூன ரனதுங்கா

இலங்கை அணிக்கு உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் அர்ஜூன ரனதுங்கா. அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் ஓய்வுக்கு பிறகு சந்திரிகாவுடன் இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். தற்போது அவர் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.

ஜெயசூர்யா

ஜெயசூர்யா

1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அதிரடி வீரர் ஜெயசூர்யா. ராஜபக்சேவின் ஆளும் கட்சியில் எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிகக்காவுக்கான குட்வில் தூதராகவும் அவர் இருக்கிறார்.

பிராங்க் வோரெல்

பிராங்க் வோரெல்

1950-ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர்வர் பிராங்க் வோரெல். வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா தொடர் அவரது பெயரில் நடத்தப்படுகிறது. ஆல்ரவுண்டரான அவர் ஓய்வு பிறகு ஜமைக்கா நாட்டு சென்ட் உறுப்பினர் ஆனார்.

Story first published: Saturday, October 26, 2013, 17:26 [IST]
Other articles published on Oct 26, 2013
English summary
Here are few sportsmen who tried their hand at the game of politics!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X