For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்றார் நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா

By Mayura Akilan

திருவனந்தபுரம்: தேசிய விளையாட்டில் தமிழக நட்சத்திரங்கள் தங்கம் வென்று சாதனை படைத்து வருகின்றனர். நீச்சலில் (50 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக்) தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஸ்குவாஷ் ஒற்றையரில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோசால் தங்கம் வென்று அசத்தினர். ஆண்கள் அணிகளுக்கான டென்னிசில், ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. டேபிள் டென்னிஸ் போட்டியில் ஷாமினி குமரேசன் தங்கம் வென்று அசத்தினார்.

Actor Vijay’s Daughter Jayaveena wins gold at National Games

தேசிய விளையாட்டுப் போட்டி

35வது தேசிய விளையாட்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன் பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு பைனலில், தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா லக்சயா மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11-5, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். லக்சயா வெள்ளி வென்றார்.

தங்க வேட்டை

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், தமிழகத்தின் சவுரவ் கோசால், ஹரிந்தர் பால் சிங் சாந்து மோதினர். அசத்தலாக ஆடிய கோசால் 3-1 (4-11, 11-4, 11-8, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்தை ஹரிந்தர் பால் சிங் சாந்து தட்டிச் சென்றார். அரையிறுதியில் வீழ்ந்த தமிழகத்தின் ரவி திக்சித், டெல்லியின் கவுரவ் நந்திரஜாய் வெண்கலம் வென்றனர்.

Jayaveena

டென்னிஸ்

ஆண்கள் அணிகளுக்கான டென்னிஸ் பைனலில், தமிழகம், தெலுங்கானா அணிகள் மோதின. இதில் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் அடங்கிய தமிழக அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. இதன்மூலம் தெலுங்கானாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அரையிறுதி வரை முன்னேறிய மகாராஷ்டிரா, கேரள அணிகள் வெண்கலம் வென்றன. பெண்கள் அணிகளுக்கான பைனலில், குஜராத் அணி, தெலுங்கானாவை தோற்கடித்து தங்கம் வென்றது. அரையிறுதி வரை சென்ற தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் வெண்கலத்தை கைப்பற்றின.

ஜெயவீனா அபாரம்

பெண்களுக்கான 50 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' பிரிவு நீச்சலில், தமிழகத்தின் ஜெயவீனா, பந்தய துாரத்தை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர், இத்தொடரில் 2வது பதக்கத்தை கைப்பற்றினார். இவர், தமிழ் நடிகர் 'தலைவாசல்' விஜய்யின் மகள் ஆவார்.

தலைவாசல் விஜய் பெருமிதம்

தனது மகளின் வெற்றி குறித்து தலைவாசல் விஜய் கூறும்போது, ''தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே மகளுடன்தான் இருக்கிறேன். அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது. இதற்கான அனைத்து படபிடிப்புகளையும் கூட ரத்து செய்து விட்டேன் என்றார்.

சர்வதேச பதக்கம்

இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேசியப் போட்டியில் ஜெயவீனா ஒரு வெள்ளி ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றார். அப்போதே எனது மகள் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது அது நினைவாகியுள்ளது. இனி அடுத்த இலக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதே'' என்றும் விஜய் கூறியுள்ளார். பிடித்த நீச்சல் வீரர் ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்தான் ஜெயவீனாவுக்கு பிடித்த நீச்சல் வீரராம். அவரைப்போல ஜெயவீனாவும் பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள்

டேபிள் டென்னிஸ்

இதனிடையே டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை ஷாமினி குமரேசன் இன்று தங்கப் பதக்கம் வென்றார்.

பதக்கப்பட்டியல்

ஹரியானா அணி 25 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 41 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி 25 8 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று 2 வது இடத்திலும் உள்ளன.

கேரளா 11 தங்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகம் 8 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 23 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, February 5, 2015, 17:58 [IST]
Other articles published on Feb 5, 2015
English summary
Fifteen -year-old Tamil Nadu girl A V Jayaveena win gold medal in the 35th National Games on Wednesday. A.V. Jayaveena (TN) (0:34.43-NGR; OR-0:34.84, A.V. Jayaveena, TN, 2015), 2. Monique Gandhi (Mah) (0:35.80), 3. Poorva Shetye (Mah) (0:35.93).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X