For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடேங்கப்பா... இந்தப் பொண்ணைப் பாருங்க.. எப்படி சைக்கிள் ஓட்டுதுன்னு.. நாமளும் இருக்கோம்!

ஸ்டட்கார்ட்: ஜெர்மனியைச் சேர்ந்த வயோலா பிராண்ட் ஒரு சைக்கிள் சாகச வீராங்கனை.. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தால் போதும்... சாகசத்தில் அவரை வீழ்த்த யாராலும் முடியாது.

ஒத்தைக் கையில் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் இவர் செய்யும் செல்ல அலும்புகளில் ஒன்று. பிரமிக்க வைக்கிறார் இவர் தனது சைக்கிள் சாகசத்தில் பல உலக அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு அசத்தியுள்ளா்.

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரத்தைச் சேர்ந்தவர்தான் வயோலா. முழுக்க முழுக்க சைக்கிள் சாகசத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சைக்கிளில் ஏறி அமர்ந்த பிறகு அவர் செய்யும் சாகசம் மூக்கின் மீது விரலை வைப்பதாக உள்ளது.

இது யாருன்னு தெரியுதா? முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்து கெத்து காட்டிய நம்ம கேப்டன்!இது யாருன்னு தெரியுதா? முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்து கெத்து காட்டிய நம்ம கேப்டன்!

புரபஷனல் சைக்கிளிங் வீராங்கனை

புரபஷனல் சைக்கிளிங் வீராங்கனை

26 வயதேயாகும் இவர் தொழில்முறை சைக்கிள் சாகச வீராங்கனை ஆவார். ஆர்ட்டிஸ்டிஸ் சைக்கிளிங் என்ற விளையாட்டுப் பிரிவில் அவர் கலந்து கொண்டு சாகசம் செய்து வருகிறார். இது ஒரு வித்தியாசமான விளையாட்டு ஆகும். அதாவது சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், டான்ஸ் மற்றும் அக்ரோபாட்டிக்ஸ் ஆகியவை கலந்த கலவை இது.

கடின பயிற்சி

கடின பயிற்சி

இது நிச்சயம் கடுமையான பயிற்சி மற்றும் தொடர் முயற்சியினால் மட்டுமே நமக்கு நிபுணத்துவத்தைக் கொடுக்கும். சிறு வயது முதலே இதற்கென பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இன்று அசத்திக் கொண்டிருக்கிறார் வயோலா. இப்போட்டியில் கலந்து கொள்வோர் நடுவர்கள் முன்பு ஐந்து நிமிடம் சைக்கிள் மீது இந்த சாகசங்களையெல்லாம் செய்ய வேண்டும். அதில் நமது திறமை முழுவதும் வெளிப்படுத்த வேண்டும்.

2 முறை வெள்ளிப் பதக்கம்

2 முறை வெள்ளிப் பதக்கம்

நாம் கடினமான பயிற்சிகளை எப்படியெல்லாம் எளிமையாக செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமக்கு வெற்றி கிடைக்கும். இதில் 2 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் வயோலா. இவரது குடும்பமே சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு வருகிறது. இவரே தனது அண்ணன் மூலமாகத்தான் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டாராம். இன்று அண்ணனை மிஞ்சிய தங்கையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிடித்தது ஹேன்ட்ஸ்டேன்ட்

பிடித்தது ஹேன்ட்ஸ்டேன்ட்

ஆர்ட்டிஸ்டிக் சைக்கிள் சாகசத்தில் தனக்கு மிகவும் பிடித்தது ஹேன்ட்ஸ்டேன்ட் தான் என்று சொல்கிறார் வயோலா. காரணம், இதைக் கற்றுக் கொள்வது மிகவும் கடினமாகும். இதை மட்டும் கற்றுக் கொள்ள இவருக்கு 7 வருடங்கள் ஆனதாம். அந்த அளவுக்கு கடினமான பிரிவு இது. இதனால்தான் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்ட இந்த ஹேன்ட்ஸேன்ட்தான் தனக்கு ரொம்ப இஷ்டம் என்று சொல்கிறார் வயோலா..! பிரமிக்க வைக்கிறீங்க மேடம்.. சூப்பர்.

Story first published: Thursday, May 7, 2020, 18:07 [IST]
Other articles published on May 7, 2020
English summary
Germany's Viola Brand is rocking in Artistic Cycling sports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X