சாய்னாவுக்கு போட்டியாக பிந்த்ரா

Posted By: Staff

புதுடில்லி: விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பது புதிய டிரண்டாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், தடகள வீரர் மில்கா சிங், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். டோணி, சச்சின் டெண்டுல்கர், தங்கல் படத்தில் மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர்சிங் போகட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் குறித்த படங்கள் வெளிவந்தன.

Biopic on Bindra

அடுத்ததாக, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் குறித்த படம் தயாராகி வருகிறது. நடிகை ஷார்தா கபூர், சாய்னாவாக நடத்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்தது துப்பாக்கிச் சுடுவதில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா குறித்து படம் தயாராகி வருகிறது.

அபினவ் பிந்த்ராவாக நடக்கப் போவது, இளம் நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூர். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்த படத்தில், ஹர்ஷ்வர்தனுடன், அவருடைய தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரும் நடிக்க உள்ளதே ஹைலைட். தற்போதுள்ள இளம் நடிகர்களுக்கு இணையாக, இன்றும் இளமையுடன் இருக்கும் அனில் கபூர் நடித்து வருகிறார். முதல் முறையாக மகனுடன் இணைந்து அவர் நடிக்க உள்ளதாக, ஹர்ஷ்வர்தன் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகளவில் வருவதால், இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. படங்களை சுட்டுத் தள்ளுங்க.

Story first published: Sunday, September 17, 2017, 17:07 [IST]
Other articles published on Sep 17, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற