For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி : தங்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு

டெல்லி: உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் பெண்கள் அணி தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருப்பதாக இந்திய வில்வித்தைச் சங்கத் தலைவர் வி.கே.மல்கோத்ரா பாராட்டியுள்ளார்.

போலந்து நாட்டின் ராக்லே நகரில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Indian women's team bags gold in archery world cup

இதில் தீபிகா குமாரி தலைமையிலான இந்திய பெண்கள் அணி கடந்த ஞாயிறன்று மெக்சிகன் அணியை 6-0 என்ற அளவில் தோற்கடித்து தங்கத்தைக் கைப்பற்றினர்.

மற்ற வீராங்கனைகள்...இந்த அணியில் தீபிகா குமாரியுடன் பாம்பேலா தேவி மற்றும் லக்‌ஷ்மி ராணி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

5 தங்கப் பதக்கங்கள்...இந்த வெற்றியின் மூலம் இப்போட்டியில் இந்தியா பெற்ற தங்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

சந்திப்பு....

தங்கம் வென்ற அணியினர் இந்திய வில்வித்தை சங்கத்தலைவர் மல்கோத்ராவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

பாராட்டு...

அப்போது தங்கம் வென்ற வீரர்களைப் பாராட்டிய மல்கோத்ரா, இதன் மூலம் அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகப் பாராட்டினார்.

Story first published: Wednesday, August 13, 2014, 10:01 [IST]
Other articles published on Aug 13, 2014
English summary
President of Archery Association of India, VK Malhotra, on Tuesday said that the women’s team has made the nation proud after bagging gold in stage four of the ongoing Archery World Cup in Wroclaw, Poland.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X