For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனாவை வீழ்த்துவது சுலபம்.. புல்லை சமாளிப்பதுதான் ரொம்பக் கஷ்டம்!!

லண்டன்: ஆவேசப் புயலான செரீனாவையே சுலபமாக வீழ்த்தி விட்ட ஜெர்மனி வீராங்கனை சபீன் லிசிக்கிக்கு புல் என்றாலே பிடிக்காது என்பது ஆச்சரியமான விஷயம். அதை விட ஆச்சரியமானது புல் மீது நடந்தாலே இவருக்கு அலர்ஜியாகி விடுமாம்.

விம்பிள்டன் போட்டிகள் புல் தரையில் நடப்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட களத்தில் தீரத்துடன் செரீனாவுடன் மோதி அரை இறுதி வரை முன்னேறியுள்ள லிசிக்கியின் கதை மிகப் பெரிய சுவாரஸ்ய பின்னணிகளைக் கொண்டது.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த புல்லால் பெரும்பாடு பட்டிருக்கிறார் லிசிக்கி. அவருக்கு புல் என்றாலே அலர்ஜி என்பதால் ரொம்ப சிரமப்பட்டுத்தான் இத்தனை காலமாக டென்னிஸ் ஆடி வருகிறாராம்.

2006 முதல்

2006 முதல்

2006ம் ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார் லிசிக்கி.

ஜெர்மனியின் செந்தேன் மலரே...

ஜெர்மனியின் செந்தேன் மலரே...

ஸ்டெபி கிராப் போன்ற சூப்பரான ஆட்டக்காரர்களைத் தந்த ஜெர்மனிதான் இவருக்கும் தாயகம்.

புல் என்றால் பயம்...

புல் என்றால் பயம்...

லிசிக்கிக்கு புல் என்றாலே பயம், அலர்ஜி. புல் தரையில் நடக்கக் கூட மாட்டாராம். அப்படி ஒரு அலர்ஜி.

செரீனாவை வீழ்த்தி சாதனை

செரீனாவை வீழ்த்தி சாதனை

ஆனால் புல் தரையான விம்பிள்டன் போட்டியில் கலந்து கொண்டதோடு, செரீனாவையும் வீழ்த்தி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

புல்தரை என்றாலே நடுக்கம்

புல்தரை என்றாலே நடுக்கம்

புல்தரையில் விளையாடுவது என்றாலே ரொம்பத் தயங்குவாராம் லிசிக்கி. அப்படி ஒரு அலர்ஜி புல் மீது.

இப்படிப்பட்ட லிசிக்கிதான்...

இப்படிப்பட்ட லிசிக்கிதான்...

ஆனால் இப்படி புல்லுக்குப் பயப்படும் லிசிக்கி, எப்படி செரீனாவை விம்பிள்டன் புல் தரையில் புயலென பாய்ந்து பாய்ந்து சாய்த்தார் என்பதுதான் ரசிகர்களின் ஆச்சரியம்.

லெண்டிலுக்குத் தங்கச்சி

லெண்டிலுக்குத் தங்கச்சி

முன்பு இவான் லெண்டில் என்று ஒரு மாபெரும் வீரர் இருந்தார். இவருக்கும் புல் தரையில் விளையாடுவது ரொம்ப சங்கட்டமான விஷயம். இதனால் இவரை புல் தடுக்கி பயில்வான் என்று கூட ரொம்ப செல்லமாக கொஞ்சுவார்கள்.

விம்பி்ள்டன் மோகமே வெற்றிக்குக் காரணம்

விம்பி்ள்டன் மோகமே வெற்றிக்குக் காரணம்

தனது விம்பிள்டன் வெற்றிக்கு விம்பிள்டன் டென்னிஸ் மீதான காதலே காரணம் என்று லிசிக்கி காரணம் சொல்கிறார். எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் உள்ள எனக்கு புல்லும் தெரியவில்லை.. செரீனா புயலையும் கண்டு அஞ்சவில்லை என்கிறார்.

அப்படியே ஆம்பளை மாதிரி...

அப்படியே ஆம்பளை மாதிரி...

லிசிக்கி குறித்து சக வீராங்கனைகளும் கூட சிலாகிக்கிறார்கள். லி னா கூறுகையில், லிசிக்கி சர்வ் பண்ணுவதைப் பார்த்தால் ஆண்கள் செய்வது போல எனக்குத் தோன்றியது என்கிறார்.

ஜூனியர் சாம்பியனாக்கும்

ஜூனியர் சாம்பியனாக்கும்

2005ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் ஜூனியர் பட்டப் போட்டியில் பட்டம் வென்றவர் லிசிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 3, 2013, 14:39 [IST]
Other articles published on Jul 3, 2013
English summary
And Sabine Lisicki's success at Wimbledon this week is all the more remarkable considering she is allergic to grass. The German player, who won again yesterday in the quarterfinals, has suffered from allergies throughout her career. But the tennis ace, who says she loves coming to Wimbledon, has refused to let it ruin her lawn tennis dreams and takes medication to keep it under control.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X