For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீசாந்த் போயி... கேரளத்தின் மானம் காக்க சஞ்சு சாம்சன் வன்னு...!

திருவனந்தபுரம்: ஸ்ரீசாந்த்தால் போன கேரள மானம், இப்போது சஞ்சு சாம்சன் மூலம் திரும்ப வந்துள்ளதாக கேரள ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்கள்.

கேரளத்தின் புதிய ஹீரோவாகவும் சஞ்சு உருவெடுத்துள்ளார். இந்த சஞ்சு வேறு யாருமல்ல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ஆவார்.

6வது ஐபிஎல் தொடரில் அத்தனை பேரின் கண்களும் இந்த சஞ்சு மீதுதான்... காரணம், கீப்பிங், பேட்டிங், பீல்டிங் என அத்தனையிலும் கலக்கினார் சஞ்சு. ஸ்ரீசாந்த்தால் கேவலப்பட்ட நிலையில் இருந்து வந்த கேரள ரசிகர்களுக்குப் பெரும் ஆறுதலாக வந்துள்ளது சஞ்சுவின் எழுச்சி.

கலக்கல் ஆட்டம்

கலக்கல் ஆட்டம்

6வது ஐபிஎல் தொடரில் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக ஆடி அனைவரையும் கவர்ந்தவர் சஞ்சு சாம்சன்.

சிறந்த இளம் வீரர்

சிறந்த இளம் வீரர்

சிறந்த பீல்டிங், சிறந்த விக்கெட் கீப்பிங், சிறந்த பேட்டிங் என கலக்கிய அவர் 6வது ஐபிஎல் தொடரின் சிறந்த இளம் வீரர் விருதையும் பெற்றார்.

வயசு 18தான்

வயசு 18தான்

இந்த குட்டி சேட்டனுக்கு வயது 18தான் ஆகிறது. இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் ஆடி 206 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட்டும் 130.20 என்று அதிரடியாகவே இருந்தது.

ஸ்ரீசாந்த் இடத்தில்

ஸ்ரீசாந்த் இடத்தில்

தற்போது கேரள ரசிகர்களின் மனதிலிருந்து ஸ்ரீசாந்த் தூக்கி எறியப்பட்டு விட்டார். அந்த இடத்திற்கு சஞ்சு குடிபெயர்ந்துள்ளார்.

இருவருமே ராஜஸ்தான்தான்...

இருவருமே ராஜஸ்தான்தான்...

என்னவிசேஷம் என்றால், ஸ்ரீசாந்த்தும் சரி, சஞ்சுவும் சரி இருவருமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களாக இருந்தவர்கள். ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார்... இன்னொருவர் பெருமையில் மிதக்கிறார்.

பிளஸ்டூ பாஸாயிட்டேன் அம்மே....

பிளஸ்டூ பாஸாயிட்டேன் அம்மே....

சஞ்சு பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடிக் கொண்டிருந்தபோதுதான் ரிசல்ட் வந்தது. அதில் அவர் நல்ல மார்க்குடன் பாஸாகியுள்ளாராம்.

வாடகை வீடுதான்

வாடகை வீடுதான்

சஞ்சு சாம்சன் வாடகை வீட்டில்தான் தனது பெற்றோர், சகோதரருடன் வசித்து வருகிறார். மிகவும் எளிமையானவர். திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகேதான் இவரது வீடு உள்ளது.

ஸ்ரீசாந்த் செய்த தவறுகளை உணர்ந்து, அதை செய்யாமல் கேரளத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் சஞ்சு என்று கேரள ரசிகர்கள் சஞ்சுவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, May 28, 2013, 12:00 [IST]
Other articles published on May 28, 2013
English summary
Teenage sensation Sanju V. Samson appears to have saved the day for Kerala after he bagged the best young cricketer award at the sixth edition of the IPL. The better known cricketer from the state, Sreesanth, meanwhile, cools his heels in jail. Eighteen-year-old Samson played 11 matches, got 10 innings and scored 206 runs with 63 not out as his highest score. He finished with a strike rate of 130.20, at an average of 25.75.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X