For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் வேகமாக ஓட நினைத்தேன்... சாம்பியன் ஆனதில் மகிழ்ச்சி- தங்கமகன் உசைன்போல்ட்

By Mayura Akilan

ரியோ: நான் மித வேகத்தில் ஓடவில்லை, இதைவிட இன்னும் வேகமாக ஓடி இலக்கை அடைய நினைத்தேன் ஆனால் சாம்பியன் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட் கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். இந்தப் போட்டியில் போல்டுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் காட்லினிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த போட்டி ரசிகர்களுக்கு இடையேயும் வார்த்தைப் போட்டியாக மாறிய நிலையில், இருவரும் நேற்று ஓட்டப்பந்தயத்தில் மோதிக் கொண்டார்கள். சுமார் 80 மீட்டர் வரை காட்லின்தான் முன்னணியில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் உசைன் போல்ட் முதலிடம் பெற்றார்.

ரசிகர்கள் உற்சாக ஆர்ப்பரிப்பு

ரசிகர்கள் உற்சாக ஆர்ப்பரிப்பு

ஒலிம்பிக் மைதானத்தில் ரசிகர்களின் உற்சாக ஆர்ப்பரிப்பு மத்தியில் பந்தைய தூரத்தை 9.81 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார் உசைன் போல்ட். இந்த வெற்றியை ஜமைக்கா மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.

ஜஸ்டின் காட்டின்

ஜஸ்டின் காட்டின்

இந்தமுறை உசைன் போல்டின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவேன் என்று அமெரிக்க ஓட்டப்பந்தைய வீரர் ஜஸ்டின் காட்லின் சவால் விடுத்திருந்தார். சொன்னது போலவே பந்தயத்தின் போது சுமார் 80 மீட்டர் வரை காட்லின்தான் முன்னணியில் இருந்தார்

வெற்றியை ருசித்த உசைன் போல்ட்

வெற்றியை ருசித்த உசைன் போல்ட்

கடைசி விநாடிகளில் எல்லையை தொட்டு வெற்றியை ருசித்து ஹாட்ரிக் வெற்றி பெற்றார் உசைன் போல்ட். போட்டி முடிந்த உடன் உசைன் போல்ட், நான் மித வேகத்தில் ஒடவில்லை. இன்னும் வேகமாக ஓடி இலக்கை எட்ட நினைத்தேன், ஆனால் சாம்பியன் ஆனது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் முழக்கம்

ரசிகர்கள் முழக்கம்

போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள், காட்லின் இரண்டு முறை போதை பொருள் அருந்தி தடை பெற்றவர் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். இது அவரை மிகவும் கவலையடையச் செய்தது.

காட்டின் வருத்தம்

காட்டின் வருத்தம்

ரசிகர்களின் செயல்பாடு குறித்து காட்லின் கூறுகையில், மனிதனாக நாம் ஒவ்வொருவரும் மரியாதை கொடுக்க வேண்டும். அதேபோல் ரசிகர்களும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை கொடுப்பதை விரும்புகிறேன் என்று கூறினார். நானும் போல்டும் சிறந்த நண்பர்கள். எங்களுக்குள் எந்த பகைமை உணர்வும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் கவலை

உசைன் போல்ட் கவலை

இந்த சம்பவம் குறித்து உசைன் போல்ட் கூறுகையில், ரசிகர்களின் செயல் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முன் நான் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை என்று கூறினார்.

மிகச்சிறந்த வெற்றி

மிகச்சிறந்த வெற்றி

எனது மிகச்சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று... நான் சாதிக்கப் போகிறேன் என்று உங்களிடம் கூறினேன். அதை செய்து காட்டியிருக்கிறேன். திட்டமிடலை களத்தில் செயல்படுத்திய விதம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார் போல்ட்.

ரசிகர்களின் ஆதரவு

ரசிகர்களின் ஆதரவு

மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு நம்ப முடியாத அளவிற்கு இருந்தது. ஏதோ கால்பந்து மைதானத்தில் இருப்பது போல உணர்ந்தேன். அவர்களுக்கு என் நன்றி. என் எஞ்சிய இரு போட்டிகளையும் கண்டு களியுங்கள் என்று போல்ட் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அழிவில்லாத சாதனை

அழிவில்லாத சாதனை

எனது சாதனைக்கு அழிவே கிடையாது... எனது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால்.. இன்றும் இரண்டு பதக்கங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. அது முடிந்த உடன் 'அழிவில்லாத சாதனை' என்பதை ஏற்றுக்கொள்வேன் என்றும் சாதனை மன்னன் உசைன் போல்ட் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 16, 2016, 12:29 [IST]
Other articles published on Aug 16, 2016
English summary
Usain Bolt rarely complains about going too fast. After the rushed road to Sunday night’s 100-meter final, he had to make an exception.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X