For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியில் துப்பாக்கி சூடு: இருவர் உயிரிழப்பு

By Karthikeyan

ரியோ டி ஜெனிரியோ: பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் நேற்று துவங்கியது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பிற்காக 85 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களும், ஏராளமான போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Two shot dead at Rio Olympic

இந்நிலையில் நேற்று மாலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வன்முறை சம்பவங்களின் போது வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போட்டி நடைபெறும் மரக்கான மைதானம் பகுதியில் மக்கள் கூட்டத்தில் ஒரு நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுள் ஒருவர் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரம் கழித்து கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல், பெண் ஒருவர் மீது மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்பித்துச் சென்ற அந்த பெண்னின் தலை மீது துப்பாக்கியால் சுட்டனர்.

Story first published: Sunday, August 7, 2016, 2:57 [IST]
Other articles published on Aug 7, 2016
English summary
Police shot a mugger near the stadium where the Rio Olympics opening ceremony took place and a woman was killed close to another Olympic site, police said Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X