செரீனாவின் மகளுடைய பெயர் தெரியுமா?

Posted By: Staff

மியாமி: டிவி சீரியல்களை 5 நாள் தொடர்ந்து பார்த்துவிட்டு, சனி, ஞாயிறு பார்க்காவிட்டால் குடும்பத் தலைவிகள் எவ்வளவு டென்ஷனாக இருப்பார்கள். அதுபோலதான், ஒரு செய்திக்கு பாலோ அப்பாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமல் நமக்கு தூக்கம் வராது.

டென்னிஸ் மகாராணி செரீனா வில்லியம்ஸ், கர்ப்பமடைந்தது முதல், அவர் என்ன சாப்பிட்டார், எப்போது தூங்கினார், தாய்மையை எப்படி உணர்ந்தார் என்பதை அவ்வப்போது, இன்ஸ்ட்கிராமல் அவரே படத்துடன் வெளியிட்டு வந்தார்.

இந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார் செரீனா. அந்தப் போட்டிக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், அவருடைய காதலன், ரெட்டிட் இணை உரிமையாளர் அலெக்சிஸ் ஓகானியனுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்குப் பின் திருமணம்

குழந்தைக்குப் பின் திருமணம்

இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்யப் போவதாக செரீனா ஏற்கனவே அறிவித்துள்ளார். குழந்தைப் பிறந்து, கிட்டத்தட்ட, 15 நாட்களாகிறது.

படம் வரலையே

படம் வரலையே

இத்தனை நாட்களாகியும் அது குறித்து ஒரு செய்தியும் இல்லையே என்று அவருடைய ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் செரீனாவை அடைந்து விட்டது.

குழந்தையுடன் படம்

குழந்தையுடன் படம்

குழந்தையுடன் தான் இருக்கும் படத்தை செரீனாவே வெளியிட்டுள்ளார். அத்துடன் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஓகானியன் ஜூனியர் என்று பெயர் வைத்துள்ளதாக செரீனா கூறியுள்ளார். சுருக்கமாக, செல்லமாக ஒலிம்பியா என்று கூப்பிடலாம்.

Story first published: Friday, September 15, 2017, 14:37 [IST]
Other articles published on Sep 15, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற