தென்னாப்பிரிக்காவுக்கு பிறகு இங்கிலாந்து போகும் வழியில் அயர்லாந்தில் இரண்டு டி-20!

Posted By: Staff

டெல்லி: தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜூலையில் இங்கிலாந்துக்கு செல்கிறது. போகும் வழியில் அயர்லாந்துக்கு சென்று, இரண்டு டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டும் செம பிஸி. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள அணி, ஜூலையில் இங்கிலாந்து செல்கிறது. அதன்பிறகு ஆஸ்திரேலியா என்று கண்டம் விட்டு கண்டம் பாய உள்ளது.

India to play Ireland

இந்த நிலையில், சந்துல சிந்து பாடுவதுபோல, இங்கிலாந்துக்கு போவதற்கு முன், ஜூன் மாதத்தில், வழியில் உள்ள அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு இரண்டு டி-20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

ஜூன் 27 மற்றும் 29ம் தேதிகளில் டப்ளினில் நடக்கும் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

இந்தியா இதற்கு முன், அயர்லாந்துக்கு, 2007ல் சென்றது. அப்போது நடந்த ஒரே ஒரு ஒருதினப் போட்டியில் இந்தியா வென்றது. டி-20ஐ பொறுத்தவரை, 2009ல் நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

Story first published: Friday, January 12, 2018, 15:59 [IST]
Other articles published on Jan 12, 2018
Please Wait while comments are loading...