For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெட்ரோல் தீர்ந்து போச்சுப்பா... ஓய்வை அறிவித்தார் அதிரடி நாயகன் டிவில்லியர்ஸ்!

சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

Recommended Video

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஏபி டி வில்லியர்ஸ்- வீடியோ

டெல்லி: அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதா தென்னாப்பிரிக்காவின் அதிரடி கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 14 ஆண்டுகளாக விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ், அந்த நாட்டில் எவ்வளவு பிரபலமோ அதைவிட இந்தியாவில் அதிகம் பிரபலமானவர். ஐபிஎல்லில் அவர் காட்டிய அதிரடிகளை யாரும் மறக்க முடியாது.

இந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார், 34 வயதாகும் டிவில்லியர்ஸ்.

பெட்ரோல் தீர்ந்து போச்சுப்பா. 14 ஆண்டுகாலமாக விளையாடியாச்சு. ஓய்வெடுக்க இதுதான் சரியான நேரம்.. அதனால், அனைத்து விதமான விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்று செய்தியில் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

31 பந்தில் சதம்

31 பந்தில் சதம்

மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ், ஒரு கட்டத்தில் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். சர்வதேச அளவில்

ஒருதினப் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில், 50, 100, 150 ரன்கள் அடித்த சாதனை இவரிடம் உள்ளது. ஒருதினப் போட்டிகளில் 31 பந்துகளில் அவர்

சதமடித்துள்ளார். ஒருதினப் போட்டிகளில் அவர் 25 சதம் அடித்துள்ளார்.

டெஸ்டிலும் அதிரடி

டெஸ்டிலும் அதிரடி

அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் சதமடித்த தென்னாப்பிரிக்க வீரராகவும் உள்ளார். டெஸ்டில் 22 சதம் அடித்துள்ளார். டி-20 போட்டியில் மிகவும் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையும் இவரிடமே உள்ளது.

20 ஆயிரம் ரன்கள்

20 ஆயிரம் ரன்கள்

123 டெஸ்ட் போட்டிகளில் 8,765 ரன்களும், 228 ஒருதினப் போட்டிகளில் 9,577 ரன்களும், 78 டி-20 போட்டிகளில் 1,672 ரன்களும் சேர்த்துள்ளார். இதைத் தவிர முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், 10,689 ரன்கள் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

ஐபிஎல்லில் கலக்கல்

ஐபிஎல்லில் கலக்கல்

ஐபிஎல்லில் முதல் சீசனில் இருந்து, இந்த சீசன் வரை அவர் விளையாடியுள்ளார். முதல் மூன்று சீசன்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய

அவர், அதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் பெங்களூர் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல்லில் 141

ஆட்டங்களில் 3,953 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 133 ரன்கள் அடித்துள்ளார். 3 சதங்கள், 28 அரை சதங்கள் விளாசியுள்ளார். அடுத்த ஐபிஎல் சீசனில்

விளையாடப் போவதில்லை என்றும் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 23, 2018, 17:58 [IST]
Other articles published on May 23, 2018
English summary
south africal Ab de villiers retires from all form of cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X