டோணியை எதிர்க்கும் அஸ்வின்.. சென்னையை வீழ்த்த பஞ்சாப் பயன்படுத்த போகும் 4 அதிரடி திட்டங்கள்!

Posted By:
தோனியை வீழ்த்த அஸ்வின் போடும் திட்டங்கள்

மும்பை: இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் இன்று இரவு போட்டி நடக்க உள்ளது. மொஹாலியில் இரவு 8 மணிக்கு போட்டி நடக்க உள்ளது.

இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் பஞ்சாப் அணியில் விளையாடுகிறார். அதுவும் சென்னை அணியின் கேப்டன் டோணியின் செல்லப்பிள்ளை அஸ்வின் அவரையே எதிர்த்து விளையாட உள்ளார்.

அஸ்வின் கேப்டனாக ஒரு வெற்றியையும் , ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டி அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் ஆச்சர்யம்

ராகுல் ஆச்சர்யம்

இந்த ஐபிஎல் தொடரில் மிக நல்ல பார்மில் இருப்பது, கே எல் ராகுல்தான். முதல் போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அடுத்த போட்டியிலும் 47 ரன்கள் எடுத்தார். சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், பஞ்சாப் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னை அணிக்கு இவர் அதிக தலைவலியை தர வாய்ப்பு இருக்கிறது.

ஜோடி

ஜோடி

அதேபோல் பஞ்சாப் அணியில் இருக்கும் பவுலிங் ஆர்டரும் சென்னை அணிக்கு பெரிய போட்டியாக இருக்கும். முஜீப் உர் ரஹ்மான், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். முக்கியமாக மொஹாலி மைதானத்தில் இவர்கள் பவுலிங் அதிக அளவில் ஈடுபடும். இதனால் சென்னை அணியை 120 ரன்களுக்குள் கூட கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அஸ்வினுக்கு தெரியும்

அஸ்வினுக்கு தெரியும்

முக்கியமாக சென்னை அணியில் விளையாடும் 90 சதவிகித வீரர்களின் பலம் பலவீனம் அஸ்வினுக்கு தெரியும். இதனால் கேப்டனாக இருக்கும் அஸ்வின், சென்னையின் பல்ஸ் பிடித்து முடிவுகளை மாற்ற முடியும். அதேபோல் அஸ்வினின் லெக் ஸ்பின் பற்றி சென்னை அணிக்கு அதிகம் தெரியாது என்பதால், அதுவும் பஞ்சாப் அணிக்கு அதிக பலன் தரும்.

அகர்வால்

அகர்வால்

சென்னை அணிக்கு எதிர்பாராத வகையில், அதிர்ச்சியை தரக்கூடிய வீரராக மயங்க் அகர்வால் இருப்பார். இந்த ஐபிஎல் தொடரில், அகர்வால், மிக முக்கியமான உருவெடுத்து இருக்கிறார். மாயா என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்படும் இந்த பேட்ஸ்மேனின் மாயத்திற்குத்தான் அஸ்வின் அணி காத்து இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் 8 மணி போட்டியில் எந்த அணி சிறந்தது என்று தெரியும்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Ashwin faces Dhoni in today IPL 2018.
Story first published: Sunday, April 15, 2018, 13:24 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற