For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாடர்ன் கிரிக்கெட்டின் பிராட்மேன் லபுஷேன்.. 30 போட்டிகளில் 10வது சதம்.. வெஸ்ட் இண்டீஸை கதறவிட்ட ஆஸி!

அடிலெய்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 330 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

11 ஆண்டுகள்.. மானம் காத்த பிராத்வெய்ட்.. அசாத்தியத்தை நிகழ்த்துமா வெஸ்ட் இண்டீஸ்? அச்சத்தில் ஆஸி! 11 ஆண்டுகள்.. மானம் காத்த பிராத்வெய்ட்.. அசாத்தியத்தை நிகழ்த்துமா வெஸ்ட் இண்டீஸ்? அச்சத்தில் ஆஸி!

ஏமாற்றிய ஸ்டீவ் ஸ்மித்

ஏமாற்றிய ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய தரப்பில் வார்னர் - கவாஜா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கவாஜா 62 ரன்கள் எடுத்து டெவோன் தாமஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

லபுஷேன் அபாரம்

லபுஷேன் அபாரம்

இதன் பின்னர் மார்னஸ் லபுஷேன் - டிராவிஸ் ஹெட் இணை ஜோடி சேர்ந்தது. 131 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்திருந்ததால், லபுஷேன் விக்கெட்டை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

10வது சதம்

10வது சதம்

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் முயற்சிகள் எதற்கும் பெரிதாக பலனளிக்கவில்லை. இதனிடையே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது சதத்தை அடித்து விளாசினார். இவர் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு பக்கம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி கடந்த போட்டியில் தவறவிட்ட சதத்தை இந்தப் போட்டியில் பூர்த்தி செய்தார்.

ஸ்டீவ் ஸ்மித் சராசரி

ஸ்டீவ் ஸ்மித் சராசரி

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. மார்னஸ் லபுஷேன் 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதுவரை 51 இன்னிங்ஸ்களில் ஆஸி. அணிக்காக களமிறங்கிய லபுஷேன் இரண்டு இரட்டை சதம் உட்பட 10 சதம், 13 அரைசதங்களை விளாசியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரியான 61.18 கடந்து, லபுஷேன் 61.60 என்ற சராசரியை எட்டியுள்ளார்.

Story first published: Thursday, December 8, 2022, 19:28 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
Australia team has accumulated 330 runs at the end of the first day of the 2nd Test match against West Indies. Marnus Labuschagne Scores his 10th Ton in Test Cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X