For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் நல்ல விக்கெட் கீப்பர்.. அசாருதீன் சொல்றது சரியா?

கொல்கத்தா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரும் அணியில் இடம் பெற்றனர்.

இவர்கள் இருவருமே விக்கெட் கீப்பர்கள் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் திறமையான விக்கெட் கீப்பர், அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என அசாருதீன் கூறியுள்ளார்.

தோனி இடத்திற்கு யார் வருவார்?

தோனி இடத்திற்கு யார் வருவார்?

தோனியை டி20 அணியில் இருந்து நீக்கியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பப் போவது தினேஷா அல்லது ரிஷப்பா என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். உத்தேச அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்ற குறிப்பு இருந்தது.

தினேஷ் கீப்பிங் செய்தார்

தினேஷ் கீப்பிங் செய்தார்

முதல் டி20 போட்டியை அசாருதீன் மணியடித்து தொடங்கி வைத்தார். இந்தியா முதலில் பந்துவீச வந்தது. அப்போது ரிஷப் பண்ட்டிற்கு பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இது ரொம்ப மோசம்.. அசாருதீன் மணியடிச்சது சரியா? "அநியாயத்தை கண்டா பொங்கும்" கம்பீர்

அதிக திறன் கொண்டவர்

அதிக திறன் கொண்டவர்

இதை பற்றி கருத்து தெரிவித்த அசாருதீன், "பண்ட்டை நாம் ஆதரிக்க வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யலாம் என்றால் ஏன் டி20 போட்டிகளில் செய்யக் கூடாது? நிச்சயம் அவர் இங்கிலாந்தில் கார்த்திக்கை விட அதிக திறன்களை வெளிப்படுத்தினார்" என கூறினார்.

யார் சொல்வது சரி?

யார் சொல்வது சரி?

இனி வரும் போட்டிகளிலாவது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார் அசாருதீன். இவர் இப்படி கூறினாலும், சிலர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் கத்துக்குட்டி தான் என முன்பு இங்கிலாந்து தொடருக்கு பின் தெரிவித்தனர்.

தினேஷ் கார்த்திக்கால் இந்தியாவுக்கு வெற்றி

தினேஷ் கார்த்திக்கால் இந்தியாவுக்கு வெற்றி

முதல் டி20யில் விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் நன்றாகவே செயல்பட்டார். அது மட்டுமின்றி, ரிஷப் பண்ட் முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் பொறுப்பாக நின்று ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

[என்னத்த சொல்றது? 110 ரன்கள் எடுக்க முட்டி மோதிய இந்தியா.. அணியை மீட்ட தினேஷ் கார்த்திக்]

Story first published: Tuesday, November 6, 2018, 7:14 [IST]
Other articles published on Nov 6, 2018
English summary
Azharuddin wants to believe in Rishab Pant for Wicket keeping
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X