அடேய் குட்டிப் பையா.. காலுக்குள்ள போய்ராதடா.. கலகலக்கும் அஸார் அலி வீடியோ!

லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் இப்போது ரத்தாகி விட்டதால் பாகிஸ்தான் வீரர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் கூட விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்து விட்டு கொரோனாவைரஸுக்கு எதிரான போரில் குதித்துள்ளது. இதனால் வீரர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

வழக்கமாக இதுபோல பிரேக் கிடைத்தால் வெளிநாடுகளுக்குப் பறப்பது பெரும்பாலான வீரர்களின் வழக்கம். ஆனால் இப்போது அது போல போக முடியவில்லை. காரணம் கொரோனாவால் வந்த பிரேக் இது என்பதால்.

பாகிஸ்தான் கேப்டன் அஸார் அலி

பாகிஸ்தான் கேப்டன் அஸார் அலி

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன்தான் அஸார் அலி. வலது கை பேட்ஸ்மேனான இவர் லெக் பிரேக் ஸ்லோ பவுலரும் கூட. தனக்குக் கிடைத்த இந்த பிரேக்கை பயன்படுத்தி உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் அஸார் அலி. வெளியில் போகாமல் வீட்டுக்குள்ளேயே அவர் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் போட்டுள்ளார்.

வீட்டு வளாகத்தில் உடற்பயிற்சி

வீட்டு வளாகத்தில் உடற்பயிற்சி

வீட்டு வளாகத்தில் புல் தரையில் அவர் உடற்பயிற்சி செய்கிறார். கூடவே 3 குட்டிப் பசங்க. யாருன்னு பார்த்தா அவரோட பசங்க. அப்பாவும், பிள்ளைகளுமாக அருமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இதில் அந்த கடைகுட்டி இருக்கானே அவன்தான் செம காமெடி. அப்பாவைப் போல செய்கிறேன். அண்ணன்களைப் போல செய்கிறேன் என்று அங்குமிங்கும் ஓடுகிறான்.

அஸார் அலியின் கடைக்குட்டி

அஸார் அலியின் கடைக்குட்டி

கடைசியில் அவர்களைப் போலவே சூப்பராக செய்தும் அசத்தியுள்ளான். அஸார் அலி அவர் பாட்டுக்கு தனது வேலையில் கவனமாக இருக்கிறார். பசங்களும் கூட சீரியஸாக செய்கின்றனர். நல்லா டிரெய்னிங் கொடுத்திருக்கார் அஸார் அலி. பாராட்டியே ஆக வேண்டும். பயிற்சி முடித்ததும் அந்தக் கடைக்குட்டியைப் பார்த்து கையை விரிக்கிறார் அப்பா அஸார் அலி. அதுவும் ஓடி வந்து கட்டிக் கொள்கிறது. சுட்டிப் பையனுக்கு சூப்பர் டிரெய்னிங் அஸார்!.

வீட்டுக்குள்ளேயே பயிற்சி எடுங்க

இந்த வீடியோவை போட்டுள்ள அஸார், வீட்டுக்கு வெளியே போக முடியாது. கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் இன்னும் போகவில்லை. இருந்தாலும் நாம் வீட்டுக்குள்ளேயே கூட உடற்பயிற்சியை செய்யலாம் என்று மெசேஜும் போட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த கொரோனா போரில் வெல்வோம் என்பதையும் மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருந்தால் கொரோனா என்ன.. எது வந்தாலும் சமாளிக்கலாமே.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan cricket Player Azhar Ali is spending his time with his kids at home
Story first published: Sunday, March 22, 2020, 10:03 [IST]
Other articles published on Mar 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X