For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா, ஆஸிக்கு காத்திருக்கும் ஆபத்து.. முதல் டெஸ்ட் மைதானத்தில் நடந்த போட்டி என்ன ஆச்சுனு பாருங்க

நாக்பூர் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3 போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.

இதன் காரணமாக இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகும் விதமாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர், ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

இந்த நிலையில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பிசிசிஐ ஆடுகளத்தில் டிவிஸ்ட் வைத்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சூர்யகுமாருக்கா இந்த நிலைமை??.. 2வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. பிசிசிஐ விடுத்த மறைமுக எச்சரிக்கை! சூர்யகுமாருக்கா இந்த நிலைமை??.. 2வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. பிசிசிஐ விடுத்த மறைமுக எச்சரிக்கை!

74 ரன்களில் சுருண்டது

74 ரன்களில் சுருண்டது

முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தில் விதர்பா, குஜராத் அணிகள் ரஞ்சி போட்டிகள் நடைபெற்ற ஆட்டம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், டாஸ் வென்று விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் பைசல் டக் அவுட்டாகி வெளியேற,அதிகபட்சமாக சஞ்சய் ரகுநாத் மட்டும் 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 74 ரன்களில் சுருண்டது.

73 ரன்கள் இலக்கு

73 ரன்கள் இலக்கு

இதில் குஜராத் வேகப்பந்துவீச்சாளர்கள் தேஜாஸ், கஜா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி முதல் இன்னிங்சில் 256 ரன்கள் அடித்துள்ளது. இதனையடுத்து 182 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி இன்னிங்சில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

54 ரன்களில் சுருண்டது

54 ரன்களில் சுருண்டது

இதில் விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத குஜராத் வீரர்கள் 54 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவினர். இதன் மூலம் இந்த ஆடுகளத்தில் முதலில் வேகப்பந்துவீச்சும், பிறகு சுழற்பந்துவீச்சும் எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.இப்படி மைதானம் கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதால், இங்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முதல் டெஸ்டில் விளையாடுகிறது.

இரு அணிக்கும் ஆபத்து

இரு அணிக்கும் ஆபத்து

இதன் காரணமக இரண்ட அணிகளுக்கும் ஆபத்து இருப்பதாகவும், போட்டி 3 நாட்களில் முடிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ல்லை என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்படி தான் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சுருட்ட வேண்டும் என்று விரிக்கப்பட்ட வலையில் இந்தியாவே சிக்கி சின்னாப்பினனமாக ஆனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 19, 2023, 20:42 [IST]
Other articles published on Jan 19, 2023
English summary
Big Danger for India and australia in nagpur test match as ranji tram out for 54 runs இந்தியா, ஆஸிக்கு காத்திருக்கும் ஆபத்து.. முதல் டெஸ்ட் மைதானத்தில் நடந்த போட்டி என்ன ஆச்சுனு பாருங்க
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X