பிராவோவா கெத்து.. கிங்குடா கெயில்.. அவமானங்கள் எல்லாவற்றிற்கும் சிக்ஸால் பதிலளித்த கரீபியன்!

Posted By:
தன் மீதான அவமானங்களை சிதறவிட்ட கெய்ல்

மொஹாலி: ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

தற்போது பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் இறங்கி ஆடி வருகிறது. அந்த அணியில் கிறிஸ் ககெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஆடும் கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாவற்றிக்கும் பதில் அளித்துள்ளார்.

அவமானம்

அவமானம்

மேற்கு இந்திய தீவுகள் அணி கெயிலை எப்படி எல்லாம் அவமானப்படுத்துமோ அப்படி எல்லாம் அவமானப்படுத்தி இருக்கிறது. போதிய அளவுசம்பளம் கொடுக்கவில்லை. அணியின் வெற்றிக்கு பாடுபட்டாலும், சரியான மதிப்பில்லை. முக்கியமாக பல அணியில் வாய்ப்பே கொடுக்கப்படாமல் இருந்தார்.

ஐபிஎல் அவமானம்

ஐபிஎல் அவமானம்

ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை கண்டுகொள்ளவில்லை. முதல் ஏலத்தில் எடுக்கப்படவில்லை, கடைசி நாளில், அதுவும் கடைசி நேரத்தில்தான் இவர் பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டார். அதுவும் 2 கோடி கொடுத்து கெயில் ஏலம் எடுக்கப்பட்டார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டார்

மீண்டார்

இந்த நிலையில் பல தடைகளுக்கு பின் இவர் அணிக்கு திரும்பி உள்ளார். இதோ இன்றைய போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். 33 பந்துகள் பிடித்த அவர் 63 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள் அடக்கம்.

பெஸ்ட் வீரர்கள்

பெஸ்ட் வீரர்கள்

ஐபிஎல் போட்டியில் விளையாடும் கரீபியன் வீரர்கள் யாருமே அந்த அணியில் சரியாக மதிக்கப்படவில்லை. ஆனால் அதே வீரர்கள்தான் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பிராவோ, ஆண்ட்ரு ரசல், சுனில் நரேன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்த ஐபிஎல் போட்டியிலும் ஹீரோக்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chris Gayle back to form in IPL matches.
Story first published: Sunday, April 15, 2018, 21:06 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற