இவங்கதான் டீம்ல எல்லாம்.. 4 இளம் வீரர்களை நம்பும் சிஎஸ்கே.. விசில் போட ரெடி!

Posted By:
இவங்கதான் டீம்ல எல்லாம்.. விசில் போட தயாராகும் சென்னை!

பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 புதிய வீரர்கள் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது உருவாகி இருக்கும் புதிய சென்னை அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த சென்னை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் சென்னை அணியில் வயதான வீரர்கள் பலர் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் கடைசி நாள் ஏலத்தின் போது சென்னை அணி இளம் வீரர்கள் பல இளைஞர்களை எடுத்தது. அதில் 4 புதிய வீரர்கள் இந்த முறை சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லுங்கிசனி

லுங்கிசனி கிடி சென்னை அணியால் 50 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய அணி தென்னாப்பிரிக்க சென்ற போது, விராட் கோஹ்லியே இவர் பந்தில் அதிகம் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்ட போக்கும் ஷர்த்துல் தாக்குர்

கெத்து காட்ட போக்கும் ஷர்த்துல் தாக்குர்

ஷர்த்துல் தாக்குர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பவுலிங் செய்யக்கூடியவர். இவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐபிஎல் போட்டியில் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது புனே அணிக்காக ஆடினார். இவர் டோணியின் செல்லபிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. 2.60 கோடி கொடுத்து ஷர்த்துல் தாக்குர் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆசிப்

ஆசிப் கேஎம் 40 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதற்கு முன் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை. இவர் சென்னை அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

கரன்

கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 5 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர். இவருக்கு இப்போதே 30 வயது ஆகிவிட்டது. உபியை சேர்ந்த இவர் நன்றாக பவுலிங் போடக்கூடியவர். அதேபோல் சென்னை அணிக்கு தேவைப்படும் போது ஆல்ரவுண்டராகவும் இருப்பார். அஸ்வினை விட சென்னை அணி இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
CSK team believes in 4 young players for IPL 2018. CSK took Dhoni, Vijay, Lungi , Raina, Jadeja, Bravo, Faf, Kedar, Rayudu, Karn, Tahir, Thakur, Santner, Watson, Jagadeesan, Chahar, Asif, Wood, Shorey, Kanish ,Billings, Bhajji, Bishoni, Monu, Kshitiz.
Story first published: Monday, April 2, 2018, 15:52 [IST]
Other articles published on Apr 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற