தினேஷ் கார்த்திக்குக்காக காத்திருக்கும் கோல்கத்தா!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
தினேஷ் கார்த்திக்கின் வருகைக்காக காத்திருக்கும் கொல்கத்தா அணி- வீடியோ

கோல்கத்தா: ஒரே போட்டியில் ஹீரோவாகியுள்ள தினேஷ் கார்த்திக் வருகைக்காக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காத்திருக்கிறது.

இலங்கையில் நடந்து நிதாஸ் கோப்பை பைனல்ஸ் போட்டியில், கடைசி ஓவரில் சிக்சர் அடித்ததுடன், 8 பந்துகளில், 29 ரன்கள் குவித்து, அதிரடி ஆட்டத்தைக் காட்டினார் தினேஷ் கார்த்திக்.

Dinesh to join KKR

பைனல்ஸில் வங்கதேசம் அணியிடம் தோல்வி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு ஒவர்களில், தனி ஒருவனாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் தினேஷ் கார்த்திக். இன்று கிரிக்கெட் உலகமே, அவருடைய அந்த ஆட்டத்தை புகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. இதற்காக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது பயிற்சியை நேற்று துவங்கியுள்ளது.

அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் வருகைக்காக அணி காத்திருக்கிறது. இம்மாத இறுதியில் அவர் அணியுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இரண்டு முறை சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடஸ் அணி, 8ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி தனது பயிற்சியை நேற்று துவங்கியுள்ளது.

அணியின் புதிய கேப்டனும், நிதாஸ் கோப்பை அதிரடி நாயகனுமான தினேஷ் கார்த்திக் மற்றும் கோச் ஜாக்ஸ் காலிஸ் இல்லாத நிலையிலும், அணி வீரர்கள் பயிற்சியை துவக்கியுள்ளனர். இந்த மாத இறுதியில் தினஷ் கார்த்திக் மற்றும் காலிஸ் அணியுடன் இணைய உள்ளனர்.

துணை கேப்டன் ராபின் உத்தப்பா தலைமையில், 11 வீரர்கள், நேற்று பயிற்சியை துவக்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஷப்னம் கில், கமலேஷ் நாகர்கோடி ஆகியோருடன், சீனியர்களான வினய் குமார், இஷாங்க் ஜக்கி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாவன் சியர்லெஸ் உள்ளிட்டோர் பயிற்சியை துவக்கியுள்ளனர்.

அதிரடி நாயகன் தினேஷ் கார்த்திக்கை வரவேற்க கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காத்திருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
KKR waiting for Dinesh Karthik for practice
Story first published: Tuesday, March 20, 2018, 10:31 [IST]
Other articles published on Mar 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற