செம்மையான ஆட்டம்.. கலக்கிய டூ பிளிசிஸ்.. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தரமான பதிலடி!

துபாய்: டூ பிளிசிஸ் மிகவும் செமையாக ஆடினார். ஸ்பின் பவுலராக இருந்தாலும் சரி, பாஸ்ட் பவுலராக இருந்தாலும் சரி அவரது ஷாட் செலக்ஷன் சிறப்பாக இருந்தது. ஐ.பி.எல் 2021 இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது.

 9 கோடி கொடுத்து எடுத்த அந்த ஆல்ரவுண்டருக்கு என்னதான் ஆச்சு..இந்த போட்டியிலாவது சான்ஸ் கொடுப்பாங்களா 9 கோடி கொடுத்து எடுத்த அந்த ஆல்ரவுண்டருக்கு என்னதான் ஆச்சு..இந்த போட்டியிலாவது சான்ஸ் கொடுப்பாங்களா

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்ததால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டூ பிளிசிஸ் செம ஆட்டம்

டூ பிளிசிஸ் செம ஆட்டம்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் வழக்கம்போல் அடித்து ஆடினார்கள். கொல்கத்தா பவுலர்களை பிரித்து விளாசினார்கள். மூவர் கூட்டணி என்று அழைக்கப்படும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன் ஓவரை எந்தவித பயமும் இன்றி விளையாடியானர்கள். ருத்ராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான டிரேட் மார்க் ஷாட்களை ஆடினார்.

கைகொடுத்து வருகிறார்.

கைகொடுத்து வருகிறார்.

இவர்களுக்கு சுனில் நரைன் செக் வைத்தார். ருத்ராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டூ பிளிசிஸ் மிகவும் செமையாக ஆடினார். அவர் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்பின் பவுலராக இருந்தாலும் சரி, பாஸ்ட் பவுலராக இருந்தாலும் சரி அவரது ஷாட் செலக்ஷன் சிறப்பாக இருந்தது. டூ பிளிசிஸ் இன்று மட்டுமல்ல தொடர்ந்து சென்னை அணிக்கு கைகொடுத்து வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு பதிலடி

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு பதிலடி

முக்கியமான பிளே ஆப் மேட்ச்களிலும், பைனலிலும் டூ பிளிசிஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். இப்படி சிறப்பாக விளையாடி வரும் டூ பிளிசிஸ்சை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டி20 உலககோப்பை அணியில் எடுக்கவில்லை. இறுதிபோட்டியில் வெறித்தனமாக ஆடியதன் மூலம் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு தரமான பதிலடி கொடுத்துளளார் டூ பிளிசிஸ்.

 கொல்கத்தா டிபென்ட செய்யுமா?

கொல்கத்தா டிபென்ட செய்யுமா?

இந்த போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. கொல்கத்தா அணியில் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் மற்றும் பெர்குசன் ஆகியோர் பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இந்த ரன்னை கொல்கத்தா டிபென்ட செய்வது கஷ்டமான காரியம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Du Plessis shot selection was excellent despite being a spin bowler and a fast bowler. Varun Chakraborty, Shakib Al Hasan and Ferguson did not take the bowling even a little
Story first published: Friday, October 15, 2021, 21:40 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X