For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழை.. அப்புறம் மழை.. அப்புறம் அடப்போங்கப்பா.. இங்கிலாந்து - பாக். டெஸ்ட் சோதனை.. போட்டி டிரா!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பெரும்பாலும் தடைபட்ட நிலையில் டிரா ஆனது.

ஐந்து நாட்களும் போட்டி மழையால் தடைபட்டு டிரா ஆனது இந்தப் போட்டி .

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்தது. ஐந்தாம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 110 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து போட்டியை டிரா செய்தது.

நேரா ஐபிஎல்-லுக்கு தான் வருவோம்.. இந்த 3 சிஎஸ்கே வீரர்கள் மட்டும் ஸ்பெஷல்!நேரா ஐபிஎல்-லுக்கு தான் வருவோம்.. இந்த 3 சிஎஸ்கே வீரர்கள் மட்டும் ஸ்பெஷல்!

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் அந்த அணி 45.4 ஓவர்கள் மட்டுமே ஆடியது. மழையால் பாதி நாள் ஆட்டம் தடைபட்டது.

மீண்டும் மழை

மீண்டும் மழை

இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்கள் ஆடிய நிலையில் மழையால் போட்டி மீண்டும் தடைபட்டது. அப்போது பாகிஸ்தான் 9 விக்கெட்களுடன் ஆடி வந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் கைவிடப்பட்டது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் ஆடி 7 ரன்கள் எடுத்து 1 விக்கெட் எடுத்த நிலையில் மீண்டும் மழை வந்தது.

டிரா

டிரா

நான்காம் நாளில் வெறும் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுகிட்டது, ஐந்தாம் நாளும் மழையால் தடைப்பட்டு 45 ஓவர்கள் வரை வீசலாம் என்ற நிலையில் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 110 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இரு அணிகளும் போட்டியை அத்துடன் டிரா செய்தன. இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1 - 0 என முன்னிலையில் உள்ளது.

Story first published: Monday, August 17, 2020, 23:04 [IST]
Other articles published on Aug 17, 2020
English summary
ENG vs PAK 2nd test match result - The most of the match washed out by rain in Southampton. The match stuck with Pakistan’s 236 runs in first innings, followed by England with 7 for 1.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X