For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துல தடையெல்லாத்தையும் கடந்துருக்காரு... சிராஜ் குறித்து கோச் பெருமிதம்

டெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடருக்கு முன்னதாக தன்னுடைய தந்தையின் மறைவு, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவாத துன்புறுத்தல்கள் ஆகியவற்றை தாண்டி இந்த சாதனையை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பான கண்டுபிடிப்பு சிராஜ் என்றும் அந்த தொடரில் அவர் பல இன்னல்களை தாண்டி சாதித்துள்ளதாகவும் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் முகமது சிராஜ். முதல் போட்டியில் முகமது ஷமி காயம் காரணமாக விலகிய நிலையில் இரண்டாவது போட்டியில் பங்கேற்று விளையாடிய சிராஜ் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.

13 விக்கெட்டுகள்

13 விக்கெட்டுகள்

இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். தொடரின் துவக்கத்திலேயே தனது தந்தையை இழந்த சிராஜ், ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே இனவாத அடிப்படையிலான துன்புறுத்தல்களையும் அனுபவித்தார். இதை தாண்டி தன்னுடைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் சிராஜ்.

சிறப்பான கண்டுபிடிப்பு

சிறப்பான கண்டுபிடிப்பு

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பான கண்டுபிடிப்பு சிராஜ் என்று இந்திய தலைமை கோச் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பான பௌலிங்கை சிராஜ் வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இனவாத சீண்டல்கள்

இனவாத சீண்டல்கள்

தன்னுடைய சொந்த இழப்பு மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவாத சீண்டல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு அவர் போராடி வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டியுள்ளார். இதையும் மீறி கோப்பையை இந்தியாவிற்கு கொண்டுவர பெரிதும் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 22, 2021, 19:08 [IST]
Other articles published on Jan 22, 2021
English summary
Siraj lost his fathe rjust before the start of the series in Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X