For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்

இந்தூர் : இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.

குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது இறுதி கட்டத்தில் தடுமாறியது.

அப்போது களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு அரை சதம் விளாசினார். மேலும் பந்துவீச்சிலும் இன்று முக்கிய விக்கட்டுகளை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.

முன்னேறி இருக்கிறது

முன்னேறி இருக்கிறது

இது குறித்து பேசிய ஹர்டிக் பாண்டியா புது பந்தில் பந்து வீச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன். எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நாளாக இது அமைந்தது. பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்தது மனசுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. இந்த யுத்தியை நான் சில காலமாக தான் செய்து வருகிறேன். இதன் மூலம் என்னுடைய இன்சுவிங் நன்றாக முன்னேறி இருக்கிறது.

மிகவும் பிடிக்கும்

மிகவும் பிடிக்கும்

எனக்கு புதிய பந்தில் எப்படி பந்து வீச மிகவும் பிடிக்கும் என்று ரவி சாஸ்திரிக்கு நன்றாகவே தெரியும். நான் காயத்திலிருந்து மீண்டும் வரும்போது பந்து வீசும் லைனில் அதிக கவனம் செலுத்தினேன். இதனால் பந்தை என்னால் ஸ்விங் செய்ய முடிந்தது. தற்போது நான் பந்தின் சீமை (seam) சிறப்பாக பயன்படுத்துகிறேன் என நினைக்கிறேன் . முன்பு நான் பந்து வீசும் முறையால் பந்து பேட்ஸ்மேன் காலுக்கு வெளியே சென்று விடும். என்னால் பந்தின் சீமை சரியாக பயன்படுத்த முடியாது. தற்போது நான் பேட்ஸ்மேன்னுக்கு நேராக வீசுகிறேன்.

ஷர்துலுக்கு நன்றி

ஷர்துலுக்கு நன்றி

பந்தை ஸ்விங்கும் செய்கிறேன். தொடர்ந்து விளையாடி வருவதால் எனக்கு எந்த உடல் நெருக்கடியும் ஏற்படவில்லை. தற்போது மனதளவில் உடல் அளவில் சிறப்பாகவே இருக்கிறேன். எனது பணிச்சுமையை பிளான் செய்துதான் அணி நிர்வாகம் என்னை பயன்படுத்துகிறது. இன்று பேட்டிங் செய்யும்போது கூட சர்துல் தக்கூர் என் மீது நம்பிக்கை வைத்து நான் சொன்னது கேட்டு பார்ட்னர்ஷிப் அமைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஹர்திக் அறிவுறுத்தல்

ஹர்திக் அறிவுறுத்தல்

ஏனென்றால் நான் பேசியதை அவர் கவனித்தார்.இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் சிறிது நேரம் செயல்பட்டது. அடுத்த முறை இங்கு போட்டி நடைபெறும் போது ஆடுகளத்தில் புற்களை வைத்தால் அது பந்துவீச்சுக்கு மேலும் பயன் தரும். இருப்பினும் இந்த ஆடுகளத்தில் 300 , 350 ரன்களுக்கு மேல் தான் செல்லும். இதுபோன்ற சிறிய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சு சாதகமாக ஆடுகளம் அமைத்தால் தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை கூறினார்.

Story first published: Tuesday, January 24, 2023, 23:32 [IST]
Other articles published on Jan 24, 2023
English summary
Hardik Pandya speaks about his new bowling skills பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X