For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சதம் விளாசிய விராட் கோஹ்லி 300 ரன்னை நோக்கி முன்னேறுவார்.. ஆரூடம் சொல்லும் தவான்

By Veera Kumar

ஆன்டிகுவா: சதம் கடந்து களத்தில் நிற்கும் விராட் கோஹ்லி, முச்சதம் விளாச வேண்டும் என்று இந்திய வீரர் ஷிகர் தவான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் நடுவேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

டாசில் வென்ற கேப்டன் கோஹ்லி இந்தியா முதலில் பேட் செய்யும் என அறிவித்தார். தவானின் 87 ரன்கள் மற்றும் அவுட் ஆகாமல் கோஹ்லி சேர்த்துள்ள 143 ரன்கள் உதவியோடு, ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

சதம் விளாசிய கோஹ்லி

சதம் விளாசிய கோஹ்லி

விராட் கோஹ்லி 16 பவுண்டரிகள் உதவியுடன் 197 பந்துகளில் 143 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவர் 3 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார்.

மூவாயிரம் ரன்னும், முதல் சதமும்

மூவாயிரம் ரன்னும், முதல் சதமும்

மூவாயிரம் ரன்களை கடந்த இந்திய டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளார் கோஹ்லி.கோஹ்லிக்கு இது 12வது டெஸ்ட் செஞ்சுரி என்றபோதிலும், மே.இ.தீவுகளுக்கு எதிராக இது முதல் சதம்.

படைப்பாரா சாதனை

படைப்பாரா சாதனை

மேலும், கோஹ்லி ஒரு டெஸ்ட் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன் 169தான். இன்று பேட்டிங்கை தொடர உள்ள கோஹ்லி, தனது பழைய உட்சபட்ச ரன்னை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஷிகர் தவான், முதல் நாளில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. 5 பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இந்தியா களமிறங்கியுள்ளதால், பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

ரன்கள் முக்கியம்

ரன்கள் முக்கியம்

இந்திய அணி எவ்வளவு நேரம் அதிகமாக ஆட முடியுமோ அவ்வளவு நேரம் களத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை ஈட்ட முடியும்.

கடவுள் ஆசைப்பட்டால்

கடவுள் ஆசைப்பட்டால்

விராட் கோஹ்லி இரட்டை சதம் அல்லது முச்சதம் விளாச வேண்டும் என்று விரும்புகிறோம். கடவுள் விரும்பினால் அது நடக்கும். கோஹ்லியின் ஷாட்டுகள் பிரமாதம். நான் அதை மறுமுனையில் ரசித்து பார்த்தேன். விராட், டைமிங்காக பந்தை தட்டுவது, டிரைவ் செய்வது மிகவும் பிடிக்கும். இவ்வாறு ஷிகர் தவான் தெரிவித்தார்,

Story first published: Friday, July 22, 2016, 16:16 [IST]
Other articles published on Jul 22, 2016
English summary
July 22: Stating that it was a pleasure to watch Virat Kohli bat, opener Shikhar Dhawan is hoping the Indian captain scores a triple century on the 2nd day of the first Test against West Indies here today (July 22).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X