For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா பிட்ச் என்றால் இளக்காரமா.. மீடியாக்கள் மீது கோஹ்லி பாய்ச்சல்

By Veera Kumar

நாக்பூர்: இந்திய பிட்சுகள் பற்றி தேவையில்லாமல் கவனம் செலுத்தப்படுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்று மீடியாக்களை சாடியுள்ள டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, இரு அணிகளாலும் ஆட முடியாது என்று அறிவிக்கும் சூழல் வராதவரை அது நல்ல ஆடுகளம்தான் என்று தடாலடியாக கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. முன்னதாக, நிருபர்களிடம் இன்று பேட்டியளித்த விராட் கோஹ்லி கூறியதாவது:

ஆடுகளத்தின் தன்மை பற்றி இந்திய அணி கவலைப்பட்டது இல்லை. தேவையில்லாமல் இந்திய ஆடுகளங்கள் பற்றி சர்ச்சை கிளப்பப்படுகிறது.

தேவையில்லை

தேவையில்லை

ஏன் இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் தேவையில்லாத சத்தம் வருகிறது என்பது புரியவில்லை. இரு அணிகளுமே அந்த ஆடுகளங்களில் ஆட முடியாது என்று கூறி விலகினால்தான் அந்த பிட்ச் மோசம் என்று அர்த்தம்.

இரு ஆல்-ரவுண்டர்கள்

இரு ஆல்-ரவுண்டர்கள்

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் சும்மா இருந்தாலும், தேவையில்லாமல் இந்த பிரச்சினை கிளப்பப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு சாதகமாக இருப்பது இயல்பான ஒன்றுதான். வேகப்பந்து வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும், ஸ்பின் வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும் இருப்பது அணிக்கு வலு சேர்க்கும்.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

பிட்ச் தன்மையை பார்த்து, 11 பேர்கொண்ட அணி கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்படும். அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும். ஆனால் அதுபற்றி இப்போது கூறமுடியாது.

மழை

மழை

மழையால் ஆட்டம் கைவிடப்படுவதை நாம் எதுவும் செய்ய முடியாது. 22 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்ற இந்திய அணி மழையால் 1 நாள் மட்டுமே ஆடிய வரலாறும் நம்மிடம் உள்ளது.

ஆம்லாவை குறிவைக்கவில்லை

ஆம்லாவை குறிவைக்கவில்லை

தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா, கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை. ஆனால் அவரை நாங்கள் குறிவைத்து செயல்படவில்லை. பொதுவாக எதிரணிகள், கேப்டனை குறிவைத்துதான் அவுட் ஆக்குவதில் முனைப்பு காட்டும். நானே அதை அனுபவித்துள்ளேன். எதிரணி கேப்டன் ரன் குவிக்க ஆரம்பித்தால் எதிரணிக்கு எரிச்சல் ஏற்படும்.

ஸ்டெயின் பற்றி கவலையில்லை

ஸ்டெயின் பற்றி கவலையில்லை

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெயின் காயத்தால் விலகியுள்ளது குறித்து நாங்கள் அக்கறை எடுக்கவில்லை. அவருக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் நிறைய போட்டிகளில் ஆடியுள்ளனர். நிறைய ரன்களை குவித்துள்ளோம். எங்களுக்கு எல்லா பந்து வீச்சாளரும் ஒன்றுதான். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Tuesday, November 24, 2015, 16:31 [IST]
Other articles published on Nov 24, 2015
English summary
India's Test captain Virat Kohli has consciously stayed away from the debate surrounding the nature of the pitches prepared for the ongoing South Africa series as he feels that these discussions are "beyond his understanding".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X