For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு தவறை மட்டும் செய்ய கூடாது.. கவனமாக இருங்கள்.. ஆஸிக்கு எதிராக இந்திய அணிக்கு வார்னிங்!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா இன்று மோதும் போட்டியில் இந்திய அணி முக்கியமான தவறு ஒன்றை செய்துவிட கூடாது. இந்திய அணி கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஆட்டம் கையை விட்டு போய்விடும்.

இரண்டு வாரம் முன் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கியமான போட்டிகள் நடக்க தொடங்கி உள்ளதால் களம் சூடுபிடித்து இருக்கிறது.

முக்கியமாக இந்திய அணியின் போட்டிகள் துவங்கிவிட்டது. இதனால் போட்டியை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்று போட்டி

இன்று போட்டி

இன்று இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையில் போட்டிகள் நடக்கிறது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை அந்த அணி வென்றது. அதே சமயம் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியையும் அந்த அணி வென்றது.

இந்தியா வலிமை

இந்தியா வலிமை

அதே சமயம் இந்திய அணியும் இந்த தொடரில் வலிமையான அணியாகவே இருக்கிறது. முக்கியமாக தென்னாபிரிக்கா பேட்டிங்கை ஆர்டரை இந்திய பவுலர்கள் எளிதாக தூசி தட்டி தூக்கி போட்டார்கள். இதனால் இந்திய அணியின் பவுலிங் இந்த போட்டியில் அதிக கவனத்திற்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முக்கியமான தவறு ஒன்றை செய்துவிட கூடாது. மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செய்த அந்த தவறை இந்திய அணி இன்று செய்துவிட கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதன்படி ஆஸ்திரேலியா மேற்கு இந்திய தீவுகள் மோதிய உலகக் கோப்பை போட்டியில் 90 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதனால் 200 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை மேற்கு இந்திய தீவுகள் சுருட்டிவிடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவின் நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக ஆடி 92 ரன்கள் எடுத்தார்.

மிக மோசம்

மிக மோசம்

இதனால் ஆஸ்திரேலியா அணி 288 ரன்கள் குவித்தது. இது மேற்கு இந்திய தீவுகள் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மேற்கு இந்திய அணியின் பந்து வீச்சு தேர்வு முறையே இதற்கு காரணம் என்கிறார்கள். ஸ்பின் பந்துகளில் எளிதாக ஆட கூடிய நாதன் கவுல்டர் நைலுக்கு அதிகமாக ஸ்பின் பவுலர்களை ஆஸ்திரேலியா அணி பயன்படுத்தியது. முதல் 20 ஓவருக்குளேயே ஸ்பீட் பவுலர்கள் அதிகம் பவுலிங் செய்துவிட்டதால், ஸ்பின் பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

ஆனால் ஆஸ்திரேலியாவின் 8வது பேட்ஸ்மேன் வரை அதிரடியாக ஆட கூடிய நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மேற்கு இந்திய தீவுகள் அணி கணிக்க தவறியது. இதனால் தேவையான நேரத்தில் ஸ்பீட் பவுலர்களையும் பயன்படுத்த வேண்டும். ஆகவே இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்பீட் பவுலர்களையும், பார்ட்டைம் பவுலர்களையும் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். மேற்கிந்திய தீவுகள் செய்த தவறை இந்திய அணி செய்யாமல் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Story first published: Sunday, June 9, 2019, 10:37 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: Will India do the same mistake against Australia's like WI in today's match?.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X