என்னப்பா டீம் இது? கேப்டன் ரோஹித் எடுத்த ரிஸ்க் முடிவு.. அதிர்ந்த ரசிகர்கள்!

நாக்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி அதிர்ச்சி அளித்தது.

கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று வந்த நிலையில், மாற்று பந்துவீச்சாளர் இல்லாமல் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு களமிறங்கி இருக்கிறது இந்திய அணி.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தால் வங்கதேச அணியிடம் இந்தியா தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.

தொடர் சமன்

தொடர் சமன்

வங்கதேச டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1 - 1 என சமன் செய்தது.

ஆறு பந்துவீச்சாளர்கள்

ஆறு பந்துவீச்சாளர்கள்

இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணி களமிறங்கியது. பந்துவீச்சில் தீபக் சாஹர், கலீல் அஹ்மது, சாஹல், வாஷிங்க்டன் சுந்தர், க்ருனால் பண்டியா மற்றும் சிவம் துபே இடம் பெற்றனர்.

மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு

மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு

மூன்றாவது போட்டியில் க்ருனால் பண்டியா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால், இந்திய அணியின் பந்துவீச்சு பலம் ஐந்தாக குறைந்துள்ளது.

காயம் வந்தால் சிக்கல்

காயம் வந்தால் சிக்கல்

ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 4 ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என்ற நிலையில், ஐந்து பந்துவீச்சாளர்களும் 4 ஓவர்கள் வீச வேண்டும். இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அணிக்கு சிக்கலாகி விடும்.

ரிஸ்க்

ரிஸ்க்

அதே போல, ஒரு பந்துவீச்சாளர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தால் மாற்று பந்துவீச்சாளருக்கு இந்தியா தடுமாறும் நிலை ஏற்படும் என்பதால் விமர்சகர்கள் இது ரிஸ்க்கான முடிவு என்பதை சுட்டிக் காட்டினர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள ஆல் - ரவுண்டர் சிவம் துபேவும் 4 ஓவர்கள் முழுமையாக வீச வேண்டும் என்ற நிலை இருப்பதை கண்ட ரசிகர்கள் கவலை அடைந்தனர். சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Captain Rohit Sharma took a risky decision in third T20. He gone with five bowlers, dropping Krunal Pandya for Manish Pandey.
Story first published: Sunday, November 10, 2019, 20:15 [IST]
Other articles published on Nov 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X