மறுபடியும் ஒரு செஞ்சுரியா? சச்சின், சேவாக் ரூட்டை பிடித்த இளம் வீரர்.. கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா!

Mayank Agarwal's consecutive centuries | மறுபடியும் ஒரு சதம் அடித்த மயங்க் அகர்வால்

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த மயங்க் அகர்வால் சச்சின், சேவாக் வரிசையில் புதிய சாதனை படைத்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஜோடியாக ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா அவுட்

ரோஹித் சர்மா அவுட்

ரோஹித் சர்மா 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அது தென்னாப்பிரிக்க அணிக்கு திருப்பு முனையாக பார்க்கப்பட்டாலும், மயங்க் அகர்வாலின் அபார ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா தடுமாறியது.

இரண்டு சிக்ஸ் அடித்தார்

இரண்டு சிக்ஸ் அடித்தார்

மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து தொடர்ந்து ஆடி சதத்தை நெருங்கினார். சதத்தை நெருங்கிய உடன் இரண்டு சிக்ஸ் அடித்து 99 ரன்களை எட்டினார். அப்போதே மிரட்டி விட்டார் மயங்க்.

மயங்க் அசத்தல் சதம்

மயங்க் அசத்தல் சதம்

அதன் பின் ஃபோர் அடித்து தன் இரண்டாவது டெஸ்ட் சதத்தை கடந்தார். 108 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தன் பேட்டிங்கில் 16 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடங்கும்.

அந்த இரட்டை சதம்

அந்த இரட்டை சதம்

முன்னதாக முதல் டெஸ்டில் தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தது இருந்தார் மயங்க் அகர்வால். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்துள்ள மயங்க் அகர்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

சேவாக் சாதனை

சேவாக் சாதனை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக துவக்க வீரர்கள் அடுத்து அடுத்த போட்டிகளில் சதம் அடிப்பது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக, சேவாக் 2009 டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்து இருந்தார்.

தொடர் சதம் சாதனை

தொடர் சதம் சாதனை

மேலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பெற்றுள்ளார் மயங்க் அகர்வால்.

மூன்று ஜாம்பவான்கள்

மூன்று ஜாம்பவான்கள்

முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய மூவரும் அடுத்து அடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளனர். இதில் சச்சின் மட்டும் மூன்று தொடர் சதங்களை அடித்துள்ளார்.

ஒரே போட்டியில்..

ஒரே போட்டியில்..

ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்தார். ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்கஅணிக்கு எதிராக இரண்டு சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோஹித் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு சதங்கள்

நான்கு சதங்கள்

ரோஹித் அடித்த அந்த இரண்டு சதங்கள் மற்றும் மயங்க் அகர்வாலின் இரண்டு சதங்களை சேர்த்து இந்திய துவக்க வீரர்கள் ஒரே டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் அடித்த சாதனைப் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது ரோஹித் - மயங்க் ஜோடி.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

இந்த சாதனைகளுக்கு நடுவே இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 58, கோலி 63*, ரஹானே 18* ரன்கள் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Mayank Agarwal hit two consecutive centuries and breaks Azharuddin, Sachin and Sehwag records on hitting consecutive centuries against South Africa in tests.
Story first published: Thursday, October 10, 2019, 19:00 [IST]
Other articles published on Oct 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X