For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக்கிடம் உள்ள பெரிய தவறு.. சுலபமாக கணிக்கும் பேட்ஸ்மேன்.. பாக். சீனியர் முக்கிய அட்வைஸ்!

மும்பை: இந்திய அணியில் தற்போது கலக்கி வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்-ன் ஓவர்களை சுலபமாக கணித்து விளையாட முடிவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. முழுக்க முழுக்க இளம் வீரர்கள் கொண்ட படையை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார்.

குறிப்பாக உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் சீனியர்களுக்கே சவால் கொடுத்து வருகின்றனர். உம்ரான் மாலிக் ஸ்டம்புகளை பறக்கவிட்டு வருகிறார்.

இனி வேற வழியே இல்ல.. இந்திய அணியில் 3 பேருக்கு ஆப்பு.. இலங்கையுடனான 3வது டி20..ஹர்திக் அதிரடி முடிவு இனி வேற வழியே இல்ல.. இந்திய அணியில் 3 பேருக்கு ஆப்பு.. இலங்கையுடனான 3வது டி20..ஹர்திக் அதிரடி முடிவு

 உம்ரானின் பவுலிங்

உம்ரானின் பவுலிங்

முதல் போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றிய உம்ரான் மாலிக், 2வது போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஆனால் 48 ரன்களை தாராளமாக வாரி வழங்கியிருந்தார். உம்ரானின் வேகத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட எதிரணி பேட்ஸ்மேன்கள் சுலபமாக சிக்ஸர்களாக மாற்றினார்.

சல்மான் பட் அட்வைஸ்

சல்மான் பட் அட்வைஸ்

இந்நிலையில் இதுகுறித்து பாக். முன்னாள் வீரர் சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார். அதில், அனுபவம் பெற்றால் தான் உம்ரான் சரி ஆவார். அதனால் தான் ரன்களை கசியவிட்டார். எதிரணி வீரர்கள் அனுபவமிக்கவர்கள் என்பது தான் பிரச்சினையே. அவர் என்ன பந்துவீச்சப்போகிறார் என்பதை சுலபமாக கணித்துவிடுகின்றனர். அது யார்க்கராக இருந்தாலும் சரி, ஸ்லோயராக இருந்தாலும் சரி கணிக்க முடிகிறது.

தப்பு கணக்கு

தப்பு கணக்கு

பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பில் இருந்து விலகி நிற்பது, இவர் போல்ட் ஆக்குவதற்கு என உம்ரான் நினைத்துக்கொள்கிறார். எப்போதும் உள்நோக்கியே யார்க்கர் வீசக்கூடாது. அவுட் சைட் தி ஆஃப் திசையிலும் யார்க்கர்களை வீச வேண்டும். நிறைய வேரியேஷன்களை முயன்று பார்க்கும் போதுதான் அனுபவம் வரும். அப்போது தான் வெற்றிகரமாக சுற்ற முடியும் என சல்மான் பட் கூறியுள்ளார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர்கள் உம்ரான் மற்றும் ஷிவம் மாவி தான். ஏனென்றால் சற்று அனுபவம் உள்ள அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருமே மோசமாக சொதப்பினர். இவர்களால் தான் தோல்விக்கு அருகே இந்தியா சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 7, 2023, 17:35 [IST]
Other articles published on Jan 7, 2023
English summary
EX-Pakistan player salman butt gives advice to umran malik over his bowling variations ahead of India vs srilanka 3rd t20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X