For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போராடிய இந்தியா.. கைகொடுத்த பிங்க் செண்டிமெண்ட்.. சரிவில் இருந்து மீண்டது தென்னாப்பிரிக்கா!

இந்தியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருக்கிறது.

By Shyamsundar

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்த தொடரில் இன்னும் யார் வெற்றிபெற போகிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறது.

தவான்

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. ரோஹித் அவுட் ஆன பின் தவானும், கோஹ்லியும் அதிரடியாக ஆடினார்கள். கோஹ்லி அதிரடியாக 75 ரன்கள் எடுத்தார். மெல்லிசான கோடு மூலம் சதம் அடிக்க தவறினார். தவான் அதிரடியாக 109 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக ஆடியது. ஷ்ரேயஸ் ஐயர், பாண்டியா, ரஹானே என களத்திற்கு வந்த வீரர்கள் அனைவரும் வேகமாக பெவிலியன் திரும்பினார்கள். மிடில் ஆர்டரில் டோணி மட்டும் 43 பந்துகளில் 42 ரன் எடுத்தார். இதனால் 50 ஓவரில் இந்தியா 289 ரன்கள் எடுத்தது.

இரண்டு முறை

இரண்டு முறை

இந்த போட்டியில் தவானும், ரஹானேவும் ஆடிக்கொண்டு இருந்த போது போட்டி போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தடைபட்டது. அதன்பின் மீண்டும் மழை காரணமாக தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது ஆட்டம் தடைபட்டது. இதனால் இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா வெற்றி

தென்னாப்பிரிக்கா வெற்றி

அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. அம்லா மீண்டும் பார்மிற்கு திரும்பினர். மிடில் ஆர்டரில் கல்சான் மரண வேகத்தில் ஆடினார். இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

பிங்க்

பிங்க்

தென்னாப்பிரிக்கா அணி இதுவரை பிங்க் உடை அணிந்து விளையாடிய எந்த போட்டியிலும் தோற்கவில்லை. இந்த போட்டியிலும் அந்த சாதனையை தக்க வைத்துள்ளது. அதேபோல் தொடரையும் தற்போது தனது கைவிட்டு நழுவி செல்லாமல் பிடித்து வைத்துள்ளது. ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Story first published: Sunday, February 11, 2018, 9:38 [IST]
Other articles published on Feb 11, 2018
English summary
India's played 4th one day match against SA in New Wanderers Stadium, Johannesburg. India won the toss and opt to bat. South Africa won by 5 wkts (DLS method match reduced to 28 overs - target 202).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X