For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

55 பந்துகளில் தீபக் ஹூடா சதம்.. இந்தியா வரலாற்று சாதனை.. அயர்லாந்துக்கு கடும் நெருக்கடி

டுபுளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் தீபக் ஹூடா 55 பந்துகளில் சதம் விளாசினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரெய்னாவுக்கு பிறகு சதம் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றம் செய்யப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி சிக்சர் மழை.. மரத்தின் உச்சியில் விழுந்த பந்து.. தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் மிரட்டல்இந்திய அணி சிக்சர் மழை.. மரத்தின் உச்சியில் விழுந்த பந்து.. தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் மிரட்டல்

கிடைத்த வாய்ப்பு

கிடைத்த வாய்ப்பு

தொடக்க வீரர்களாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடினார். அதிரடியாக ஆட முற்பட்ட இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீபக் ஹூடா 14 ரன்கள் எடுத்திருந்த போது நடுவர் அவுட் தர, டிஆர்எஸ் முடிவில், அது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்சரும், 3 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சஞ்சு சாம்சன் அரைசதத்தை 31 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

தீபக் ஹூடா சதம்

தீபக் ஹூடா சதம்

தீபக் ஹூடா மறுபக்கம் சிக்சர், சிக்ராக விளாச 55 பந்துகளில் தனது முதல் சதத்தை பர்த்தி செய்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் தனது பேட்டிங்கில் பட்டையை கிளப்பி 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இந்திய அணியின் இலக்கு 250 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்வரிசை வீரர்கள் பெரிய ஷாட் ஆட முயன்று அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 முறை 200 ரன்களை குவித்த அணி என்ற பெருமையை இந்தியா படைத்தது.

Story first published: Tuesday, June 28, 2022, 23:27 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
India set 226 runs as target for Ireland as Deepak hooda hits century55 பந்துகளில் தீபக் ஹூடா சதம்.. இந்தியா வரலாற்று சாதனை.. அயர்லாந்துக்கு கடும் நெருக்கடி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X