For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு.. ரிஷப் பண்ட்க்கு பதில் யார் தெரியுமா?

மும்பை : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். புதிய தேர்வுக்குழு தேர்வு செய்த அணியை தற்போது காணலாம்.

77 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 419 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. லயான் சாதனை 77 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 419 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. லயான் சாதனை

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெறாத ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தொடக்க வீரராக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவ வீரர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிசை வீரராக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பண்ட்க்கு பதிலாக 2 வீரர்கள்

பண்ட்க்கு பதிலாக 2 வீரர்கள்

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் அவருக்கு மாற்றாக இஷான் கிஷனும், கேஎஸ் பரத்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். சுழற்பந்தவீச்சாளராக அஸ்வின், குல்தீப் யாதவ் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்துவீச்சு படை

வேகப்பந்துவீச்சு படை

இதே போன்று வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி, முகமது சிராஜ்,உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாட்கட், ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் அணியில் பும்ரா இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது.

 இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மான் கில், புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன்,சூர்யகுமார் யாதவ், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல்,முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாட்கட்

Story first published: Friday, January 13, 2023, 23:00 [IST]
Other articles published on Jan 13, 2023
English summary
India squad for first 2 test vs australia - 2 star players return to the team ஆஸி.க்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு.. ரிஷப் பண்ட்க்கு பதில் யார் தெரியுமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X