For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழையும், கெயிலும் விளையாடியும் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ்..! அடிச்சு தூக்கிய இந்தியா..! #IND vs WI

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை தன் வசப் படுத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.

2வது ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப் பட்டார்.

நீக்கம், சேர்ப்பு

நீக்கம், சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப் பட்டனர். கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் தொடக்க ஆட்டக் காரர்களாக இறங்கினர்.

வந்தது மழை

வந்தது மழை

2வது ஓவரிலேயே மழை வர ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து ஆடிய கெய்ல், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமதுவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். இவின் லீவிசும் இந்திய பந்து வீச்சை பதம் பார்க்க தவறவில்லை.

கெய்ல் அரைசதம்

கெய்ல் அரைசதம்

அதன் காரணமாக, முதல் 10 ஓவர்களில் ஸ்கோர் 114 ரன்களானது. 2015 உலக கோப்பைக்கு பிறகு முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்சம் ஸ்கோர் இது தான். கெய்ல் 54வது அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 115 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. சாஹலின் பந்து வீச்சில் லீவிஸ் வெளியேறினார். அடுத்த ஓவரில் 72 ரன்களுடன் கெய்ல் கோலியிடம் கேட்சானார்.

ஆட்டம் பாதிப்பு

ஆட்டம் பாதிப்பு

22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. மழை விடாததால், ஆட்டம் 35 ஒவர்களாக குறைக்கப்பட்டது. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது.

255 ரன்கள் இலக்கு

255 ரன்கள் இலக்கு

இதன்மூலம் வெஸ்ட் இண்டீக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ரோகித் சர்மா 10 ரன்னில் சொதப்பி ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

கலக்கல் ஜோடி

கலக்கல் ஜோடி

தவான் 36 ரன்களுடன் திருப்தி அடைந்து நடையை கட்டினார். ரிஷப் பன்ட் டக் அவுட். கடந்த போட்டியை போல கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் விராட் கோலி 48 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

கோலி சதம்

கோலி சதம்

தொடர்ந்து இந்த ஜோடி அதிரடி காட்ட ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில், எதிர்பாராத விதமாக ரோச் பந்துவீச்சில் 65 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 94 பந்துகளில் தமது 43வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இறுதியில் கோலி 114) ரன்களும், கேதர் ஜாதவ் 19 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 32.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டக்வொர்த் லூயிஸ் முறையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Story first published: Thursday, August 15, 2019, 6:15 [IST]
Other articles published on Aug 15, 2019
English summary
India won the 3rd odi against west indies and clinch the series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X