எனக்கு லீவ் வேணும் பாஸ்... பிசிசிஐயிடம் லீவ் கேட்டு விண்ணப்பித்த கோஹ்லி!

Posted By:

டெல்லி: தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லி தற்போது விடுமுறை கேட்டு பிசிசிஐ யிடம் விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக அவர் சில தனிப்பட்ட விஷயங்களை காரணமாக தெரிவித்துள்ளார். இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதும் இதற்கு ஒரு வகையில் காரணமாக பார்க்கப்படுகிறது.

முக்கியமான பல தொடர்கள் காத்திருக்கையில் கோஹ்லி பிசிசிஐயிடம் விடுமுறைக்காக விண்ணப்பித்து இருப்பது இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்து இருக்கிறது.

 அடுத்தடுத்து நடக்கும் போட்டிகள்

அடுத்தடுத்து நடக்கும் போட்டிகள்

விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறார். முக்கியமாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவர் தொடர்ந்து அணியில் விளையாடி ஓய்வு இல்லாமல் இருக்கிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர் என அனைத்தும் மிக முக்கியமான போட்டியாக இருக்கின்றது. அனைத்திலும் கேப்டனாக இருந்து கோஹ்லி மிகவும் களைப்படைந்துள்ளார்.

 பிசிசிஐயிடம் விடுமுறை கேட்கும் கோஹ்லி

பிசிசிஐயிடம் விடுமுறை கேட்கும் கோஹ்லி

இந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு அவர் தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக தெரிவித்துள்ளார். அதேபோல் தன்னுடைய குடுபத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவர் ஜனவரியில் நடக்க இருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்காக தயார் செய்யவே இப்போது விடுமுறை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இலங்கைத் தொடர்

இலங்கைத் தொடர்

இந்த நிலையில் கோஹ்லியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனபடி கோஹ்லி பெரும்பாலும் அடுத்து நடக்க இருக்கும் இலங்கை தொடரில் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இலங்கைத் தொடரின் எந்த போட்டியிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.

 இந்தியாவுக்கு யார் கேப்டன்

இந்தியாவுக்கு யார் கேப்டன்

விராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட இருப்பதால் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் நியூசிலாந்து டி-20 ரோஹித் சர்மாவுக்கு கேப்டனுக்கான வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்பட்டது. அதன் பின் அந்த போட்டியில் கோஹ்லியை கேப்டனாக இருப்பார் என்று முடிவாகியுள்ளது. அனால் இலங்கை தொடரில் டெஸ்ட் மற்றும் ஒண்டே போட்டிகளும் நடக்க இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பாரா, இல்லை வேறு யாரையாவது கேப்டன்கஞ் நியமிக்கலாமா என பிசிசிஐ ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, October 24, 2017, 5:56 [IST]
Other articles published on Oct 24, 2017
Please Wait while comments are loading...