
முடிவு என்ன
இந்த நிலையில் பெங்களூர் அணியில் இருந்து கேப்டன் கோலி வெளியே அனுப்பிய இரண்டு வீரர்கள் இன்று மேட்ச் வின்னர் ஆகும் வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்று டெல்லி அணிதான் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கணித்துள்ளனர். இதற்கான காரணத்தையும் இணையத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எப்படி
பொதுவாக பெங்களூர் அணியில் இருந்து ஒரு வீரர் வெளியேற்றப்பட்டால்.. அடுத்த வருடம் அவர் எந்த அணியில் ஆடுகிறாரோ.. அந்த அணி பெரும்பாலும் கோப்பை வெல்கிறது. அதன்படி 2014ல் பெங்களூர் அணியில் விளையாடிய பர்தீவ் பட்டேல்.. 2015ல் வெளியேற்றப்பட்டார். அந்த வருடம் மும்பை சென்றார் பர்தீவ் பட்டேல். மும்பை அந்த வருடம் கோப்பை வென்றது.

கோப்பை
2017லும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பர்தீவ் பட்டேல் இருந்த போது அந்த அணி கோப்பை வென்றது. அதேபோல் 2018ல் டி காக் பெங்களூர் அணியில் இருந்தார். இவரை கோலி 2019 சீசனுக்கு முன் வெளியே அனுப்பினார். 2019 சீசனில் இவர் மும்பை அணியில் டி காக் ஆடினார். அந்த சீசனில் மும்பை அணி கோப்பையை வென்றது.

வாட்சன்
அதேபோல் 2017ல் ஷேன் வாட்சன் பெங்களூர் அணியில் ஆடினார். பெங்களூர் அணியில் இவர் சரியாக ஆடாத நிலையில், 2018 சிஎஸ்கே அணிக்கு வந்தார். சிஎஸ்கே அணிக்கு வாட்சன் வந்த 2018ம் வருடம் சிஎஸ்கே கோப்பை வென்றது. அந்த சீசனில் வாட்சன்தான் இறுதி போட்டியில் மேட்ச் வின்னராக இருந்தார்.

எப்படி
இந்த நிலையில் பெங்களூர் அணியில் இருந்து கடந்த வருடம் அனுப்பப்பட்ட பெங்களூர் ஹெட்மெயர், ஸ்டோய்னிஸ் இருவரும் இந்த வருடம் டெல்லி அணியில் ஆடுகிறார்கள். இதனால் கணக்குப்படி பார்த்தால்.. இந்த வருடம் டெல்லி அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கணித்துள்ளனர்.

பெங்களூர்
பெங்களூர் அணியில் இருந்து வெளியேறும் வீரர் அடுத்த சீசனில் எங்கே ஆடுகிறாரோ அந்த அணிதான் கோப்பையை வெல்கிறது. இதனால் இன்று டெல்லி அணியின் ஹெட்மெயர், ஸ்டோய்னிஸ் இருவரும் மேட்ச் வின்னராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செமி பைனல் போட்டியிலேயே இவர்கள் இருவரும் நன்றாக ஆடிய நிலையில்.. இன்றைய போட்டியில் இவர்கள் மேட்ச் வின்னர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.