For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துரத்திவிட்டது யார்?.. பழைய பகையை தூசி தட்டி எடுக்கும் ரிக்கி பாண்டிங்.. ரோஹித்தை சாய்க்க பிளான் பி!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள ஐபிஎல் போட்டி டெல்லி அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங்கிற்கு இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கிறது. முதல் முறையாக பைனல்ஸ் சென்று இருக்கும் டெல்லி அணி எப்படியாவது மும்பையை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தக்க வைத்து.. ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

என்ன

என்ன

இன்று நடக்கும் இறுதிப்போட்டி டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கும் கொஞ்சம் முக்கியமான போட்டியாகும். இவருக்கு கொஞ்சம் உணர்வு ரீதியாக இது நெருக்கமான போட்டி. முதல் விஷயம்.. முதல்முறையாக டெல்லி அணியை இவர் பைனல்ஸ் வரை கொண்டு வந்துள்ளார். இளம் வீரர்களை வைத்து எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று பாண்டிங் நினைக்கிறார்.

பாண்டிங் என்ன நினைக்கிறார்

பாண்டிங் என்ன நினைக்கிறார்

அதேபோல் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பையை வீழ்த்தினால், அது டெல்லி அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று பாண்டிங் நினைக்கிறார். ஐபிஎல் தொடரில்... தன்னுடைய பயிற்சியாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாண்டிங் உறுதியாக இருக்கிறார். இதனால் இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பாண்டிங்கின் டெல்லி அணி உள்ளது.

மும்பை

மும்பை

இவருக்கும் மும்பை அணிக்கும் இருக்கும் பழைய உரசலும் கூட, இன்றைய போட்டி கவனத்திற்கு உள்ளாக காரணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 2013 வரை இருந்தவர்தான் பாண்டிங். அதன்பின் ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சியை கொடுத்துவிட்டு.. பாண்டிங் பயிற்சியாளர் ஆனார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் இருந்து பாண்டிங் வெளியேறினார்.

வெளியேற்றப்பட்டார்

வெளியேற்றப்பட்டார்

மும்பையில் இருந்து பாண்டிங் வெளியேறினார் என்று சொல்வதை விட வெளியேற்றப்பட்டார் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாண்டிங் விலக்கப்பட்டார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய அளவில் மதிப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேறியவர்.. தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

எப்படி

எப்படி

இதனால் இன்று நடக்கும் போட்டி ரிக்கி பாண்டிங்கிற்கு மான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணியில் கூடுதல் பேட்ஸ்மேன்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும் என்பதால் ரிக்கி பாண்டிங் இன்று கூடுதல் பேட்ஸ்மேன்களை களமிறக்குவார் என்று கூறுகிறார்கள். அணிக்குள் ரஹானே, பிரித்வி ஷா இரண்டு பேருமே இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இன்று ரோஹித் சர்மாவின் வலுவான அணியை சாய்க்க இதுதான் பாண்டிங்கின் பிளானாக இருக்கும் என்கிறார்கள் . இன்று ஆடும் டெல்லி அணியில் ஸ்டோய்னிஸ், தவான், பிரித்வி ஷா, ரஹானே, ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட், அஸ்வின், ரபாடா, அக்சர் பட்டேல், அன்ரிச் நோர்ட்ச் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Tuesday, November 10, 2020, 10:37 [IST]
Other articles published on Nov 10, 2020
English summary
IPL 2020: Ricky Ponting has to win Mumbai today - Here is the reason
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X