நல்லா பாருங்க.. எனக்கு இது மேட்டரே இல்லை.. உள்ளே இருந்த கோபம்.. வச்சு செய்த ரோஹித் சர்மா.. அதிரடி!

துபாய்: டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது தலைமைப்பண்பை நிரூபித்து உள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அதிரடியாக ஆடி கோப்பையை வென்றுள்ளது. 2019ல் கோப்பையை வென்ற மும்பை.. மீண்டும் வென்று சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அதிரடியாக ஆடி எளிதாக வென்றது.

கேப்டன்சி

கேப்டன்சி

இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மாதான். பேட்டிங், கேப்டன்சி என்று இரண்டிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது தலைமைப்பண்பை நிரூபித்து உள்ளார்.

எப்படி

எப்படி

அதிலும் டெல்லி அணி பேட்டிங் செய்த போது, ரோஹித் சர்மா கொடுத்த பவுலிங் ரொட்டீஷன் பெரிய அளவில் கவனம் பெற்றது. 4வது ஓவரில் ஜெயந்த் யாதவிடம் கொடுத்தது, ரன் செல்கிறது என்று தெரிந்ததும் இடையில் பும்ராவை ஓவர் போட வைத்தது என்று இந்த ரோஹித் எடுத்த முடிவு எதையும் கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை.

கணிக்க முடியவில்லை

கணிக்க முடியவில்லை

அதேபோல் பீல்டிங் செட்டப்பும் சிறப்பாக வைத்து இருந்தார். பவர்பிளேவிலேயே டெல்லி அணியால் சரியாக அடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தபடி மிக சிறப்பாக ரோஹித் பீல்டிங் செட்டப் செய்து இருந்தார். ஒரு பேட்ஸ்மேனாகவும் இன்று ரோஹித் சிறப்பாக செயல்பட்டார்.

முழுமை

முழுமை

51 பந்துகள் பிடித்த அவர் 68 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர் 5 பவுண்டரி அடக்கம். முழுமையான ஆட்டத்தை இன்று ரோஹித் சர்மா வெளிப்படுத்தினார். இப்படித்தான் ஆட வேண்டும் என்றது பல கேப்டன்களுக்கு பாடம் எடுத்துள்ளார். முக்கியமான நேரத்தில் அணிக்காக இவர் ஆடியுள்ளார்.தன்னை இந்திய அணியில் எடுக்காத கோபத்தையும் இன்று ரோஹித் சர்மா தனது கேப்டன்சி மூலம் தீர்த்துக் கொண்டார்.

பாருங்க

பாருங்க

டாஸ் தோல்வி அடையும் போதே.. ரோஹித் சர்மா இதை கூறிவிட்டார். டாஸ் தோல்வி அடைந்தது எல்லாமே பெரிய விஷயமே இல்லை. எதுவாக இருந்தாலும் பிட்ச் சாதகமாவே இருக்கிறது என்றார். மிக சரியாக பிட்ச் கணித்து இன்று ஆடிய ரோஹித் சர்மா.. மும்பை அணிக்கு மீண்டும் கோப்பை வாங்கி கொடுத்து தன்னை தலை சிறந்த கேப்டனாக நிரூபித்து உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Rohit Sharma proved captaincy in the match against Delhi today
Story first published: Tuesday, November 10, 2020, 22:52 [IST]
Other articles published on Nov 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X