For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித்துக்கெல்லாம் இடமில்லை.. ஒரு சிஎஸ்கே வீரர் கூட கிடையாது.. என் கேப்டன் இவர்தான்.. சேவாக் அதிரடி

டெல்லி : 2020 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரர் சேவாக் சிறந்த வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் அளிக்கவில்லை.

அதே சமயம், தொடரின் பின்பாதியில் கடந்த ஆண்டுகளைப் போல சொதப்பிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேப்டன் பதவி அளித்து திகைக்க வைத்துள்ளார் சேவாக்.

சேவாக்கின் ஐபிஎல் அணி

சேவாக்கின் ஐபிஎல் அணி

முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் பார்வையில் சிறந்த வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணியை தேர்வு செய்து வருகின்றனர். 2௦20 ஐபிஎல் தொடரில் பல விதங்களிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சேவாக் தன் பங்கிற்கு ஒரு அதிரடி ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மா இல்லை

ரோஹித் சர்மா இல்லை

சேவாக் தேர்வு செய்துள்ள ஐபிஎல் அணியில் முதல் அதிர்ச்சியே ரோஹித் சர்மா இல்லாதது தான். அவர் இந்த சீசனில் பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்டார். எனினும், மூன்று அரைசதம் அடித்துள்ளார். மும்பை அணியை ஐபிஎல் கோப்பையை நோக்கி வழிநடத்தி உள்ளார்.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

ரோஹித் இல்லாத நிலையில், அணியின் துவக்க வீரர்களாக தொடரில் அதிக ரன்கள் குவித்த கேஎல் ராகுல் மற்றும் பெங்களூர் அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்-லை தேர்வு செய்துள்ளார். படிக்கல் தன் முதல் ஐபிஎல் தொடரிலேயே ஐந்து அரைசதம் அடித்து இருந்தார்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்வை தேர்வு செய்துள்ளார் சேவாக். அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தன் அணியில் இடம் அளித்துள்ளார்.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

அடுத்து மிடில் ஆர்டரில் துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் கோலியை தேர்வு செய்து ஆச்சரியம் அளித்துள்ளார் சேவாக். இவர்கள் இருவரில் யாரை அணிக்கு கேப்டனாக தேர்வு செய்வது என தான் குழம்பியதாக கூறிய அவர் விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறார்.

அதிரடி மன்னன்

அதிரடி மன்னன்

அதிரடியாக ரன் குவிக்க, பினிஷராக ஏபி டிவில்லியர்ஸ்-ஐ தேர்வு செய்துள்ளார் சேவாக். பெங்களூர் அணியை பல போட்டிகளில் தன் அதிரடி ஆட்டத்தால் காப்பாற்ற போராடினார் டிவில்லியர்ஸ். சேவாக் ஆல்-ரவுண்டர்கள் யாரையும் தேர்வு செய்யவில்லை.

வேகப் பந்துவீச்சு

வேகப் பந்துவீச்சு

அடுத்து வேகப் பந்துவீச்சில் அவர் மூன்று வீரர்களை தேர்வு செய்தார். இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய காகிசோ ரபாடா, அவருக்கு அடுத்து அதிக விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா மற்றும் துல்லியமாக பந்து வீசிய முகமது ஷமியை தேர்வு செய்து இருந்தார்.

சுழற் பந்துவீச்சு

சுழற் பந்துவீச்சு

அடுத்து சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்-ஐ தேர்வு செய்தார் சேவாக். ரஷித் கான் 20 விக்கெட்களும், சாஹல் 21 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தனர்.

கூடுதல் வீரர்கள்

கூடுதல் வீரர்கள்

இந்த 11 வீரர்கள் தவிர்த்து இரண்டு கூடுதல் வீரர்களை சேவாக் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக ஆடியதற்காக அதிக மதிப்புமிக்க வீரர் விருதை வென்ற ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மும்பையின் இஷான் கிஷன் ஆகியோரை தேர்வு செய்தார். சேவாக் தேர்வு செய்த அணியில் ஒரு சிஎஸ்கே வீரர் கூட இடம் பெறவில்லை.

சேவாக் ஐபிஎல் அணி

சேவாக் ஐபிஎல் அணி

சேவாக் தேர்வு செய்த ஐபிஎல் அணி - தேவ்தத் படிக்கல், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி (கேப்டன்), டேவிட் வார்னர், ஏபி டிவில்லியர்ஸ், ரஷித் கான், சாஹல், பும்ரா, காகிசோ ரபாடா, முகமது ஷமி

Story first published: Sunday, November 15, 2020, 12:10 [IST]
Other articles published on Nov 15, 2020
English summary
IPL 2020 : Virender Sehwag picks Virat Kohli as his IPL team captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X