For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றே தவறுகள் தான்.. மாறிப்போன பஞ்சாப்பின் தலையெழுத்து.. அதிலும் பவர் ப்ளேயில் செய்த தவறு மிக மோசம்

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய தவறுகளை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் சுலபமாக வென்றிருக்கலாம்.

Recommended Video

Punjab Kings தோல்விக்கு Anil Kumbleவின் Team Selection காரணமா? | I OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

இலக்கு

இலக்கு

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 49 (36), ரம்ரோர் 43 (17), எவின் லீவிஸ் 36 (21) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்தது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 49 (33) ரன்களும், மயங்க் அகர்வால் 67 (43) ரன்களும் சேர்த்து வலுவான நிலையில் விட்டுச் சென்றனர்.

எதிர்பாராத தோல்வி

எதிர்பாராத தோல்வி

இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் திருப்புமுனையை கொடுத்தார் ராஜஸ்தான் பவுலர் கார்த்திக் தியாகி. ஓவரில் 0, 1, W, 0, W, 0 என ஒரு ரன்னை மட்டும் விட்டுக்கொடுத்து பூரன், ஹூடாவின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்து கார்த்திக் தியாகி அசத்தினார். இதனால் இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 183 ரன்கள் சேர்த்து, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியை பஞ்சாப் அணி கோட்டை விட்டது 3 தவறுகளால் தான்.

ஹூடா எதற்காக?

ஹூடா எதற்காக?

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 4 ஓவர்களில் 40 ரன்கள் குவித்திருந்தது. அனுபவ வீரர் முகமது ஷமி மற்றும் அறிமுக வீரர் இஷான் பொரேல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். எனவே 5வது விக்கெட்டிற்கு பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவராக ராகுலை கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் 5ஆவது ஓவரை பார்ட் டைம் பௌலர் தீபக் ஹீடா வீசினார். இவரின் ஓவரில் 13 ரன்கள் பறந்தது. அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் ப்ரார் போன்ற பௌலர்கள் இருக்கும்போது, பவர் பிளேயின் பார்ட் டைம் ஸ்பின்னரை கொண்டு வந்தது முதல் முக்கிய தவறாக அமைந்தது. அர்ஷ்தீப், ப்ரார் இருவரும் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், தனக்குக் கொடுத்த மூன்று ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால், அவருக்கு உடனடியாக 4வது ஓவர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஓவரை (16ஆவது ஓவர்), மீண்டும் பார்ட் டைம் ஸ்பின்னர் ஹூடாவுக்கு வழங்கினார். அந்த ஓவரிலும் 24 ரன்கள் பறந்தது. தாக்கம் ஏற்படுத்திய அர்ஷ்தீப்புக்கு மீண்டும் ஓவரை கொடுத்திருந்தால் முன்கூட்டியே ராஜஸ்தானை சுருட்டியிருக்கலாம்.

கடும் பிரஷர்

கடும் பிரஷர்

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது அதிரடி வீரர்களான நிகோலஸ் பூரன், மார்க்கரம் ஆகியோர் களத்தில் இருந்தனர். இளம் வீரர் வீசிய அந்த 6 பந்துகளில் எந்தவித பதற்றமும் இன்றி ஒரு பவுண்டரியை பறக்கவிட்டிருந்தால் கூட வென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கடைசி ஓவரில் கடும் பிரஷருக்கு ஆளாகினர். இதன் காரணமாகவே இரண்டு விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்கள். அடுத்த போட்டியில் இந்த தவறுகளை பஞ்சாப் சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 22, 2021, 12:44 [IST]
Other articles published on Sep 22, 2021
English summary
IPL 2021: 3 mistakes that Reason for Punjab kings lose in the match against Rajasthan Royals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X