For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான் அணி இத கண்டிப்பா செய்யனும்.. இல்லைனா அவ்ளோதான் போச்சு.. எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா!

சென்னை: முக்கிய வீரர்கள் வெளியேறியதால் தவித்து வரும் ராஜஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது ராஜஸ்தான் அணி தடுமாறி வருகிறது.

ராஜஸ்தான் வீரர்கள் ஒவ்வொருத்தரும் மாறணும்... அப்பதான் அவங்களால நிலைக்க முடியும்... சோப்ரா உறுதி ராஜஸ்தான் வீரர்கள் ஒவ்வொருத்தரும் மாறணும்... அப்பதான் அவங்களால நிலைக்க முடியும்... சோப்ரா உறுதி

இவர்களின் விலகலால் ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பென் ஸ்டோஸ்க் காயம்

பென் ஸ்டோஸ்க் காயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த பென் ஸ்டோக்ஸுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை மிகவும் பெரிதாக இருப்பதால், அவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதே போல ஜோப்ரா ஆர்ச்சரும் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் ஏற்கனவே விலகினார்.

மேலும் ஒரு அதிர்ச்சி

மேலும் ஒரு அதிர்ச்சி

சமீபத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி அந்த அணிக்கு கிடைத்தது. ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவ்விங்ஸ்டன் அணியின் பபுளில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால் மீண்டும் இங்கிலாந்துக்கு புறப்பட்டுவிட்டார். இதனால் பேட்டிங்கில் சரிவை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சிக்கல்

சிக்கல்

இந்நிலையில் அயல்நாட்டு வீரர்கள் இல்லாததால் ராஜஸ்தான் அணி என்ன செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராஜஸ்தான் அணியில் தற்போது வீரர்கள் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த சூழலில் அவர்கள் செய்ய வேண்டியது ஆட்ட முறையை மாற்றுவது ஒன்றுமட்டுமே ஆகும்.

 சோப்ரா அறிவுரை

சோப்ரா அறிவுரை

ராஜஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்திலேயே மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்காக ஜாஸ் பட்லர் இந்த முறை அதிக ரன்களை அடிக்க வேண்டும். அதே போல சஞ்சு சாம்சனும் தொடர்ச்சியாக ரன் அடிக்க வேண்டும். அவர் முதல் 3 போட்டிகளில் 150 ஸ்ட்ரைக் ரேட் உள்ளது, ஆனால் 3வது போட்டியில் 130 மட்டுமே உள்ளது.

மாற்றங்கள் தேவை

மாற்றங்கள் தேவை

இதே போலதான் டேவிட் மில்லர் அதிக ரன்களை அடிக்க வேண்டும். ரியான் பராக்கை பொறுத்தவரை நன்கு வளர்ந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதனை செய்தால் மட்டுமே ராஜஸ்தான் அணி மீளும். மாற்றங்களை பொறுத்தவரை மன்னன் வோஹ்ராவுக்கு பதிலாக யாஷாஸ்வி ஜெய்ஸ்வாலும், உனத்கட்டிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலும் சேர்க்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 18:32 [IST]
Other articles published on Apr 24, 2021
English summary
Aakash Chopra Gives tips to Rajasthan Royals to comeback in this season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X