யோவ் என்னயா பன்ற.. ‘அதிரடி வீரர்’ கேதர் ஜாதவ் எடுத்த தைரியமான முடிவு.. மோசமாக கிண்டலடித்த ரசிகர்கள்!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் கேதர் ஜாதவ் எடுத்த தைரியமான முடிவு குறித்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் நேற்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிமையாக வெற்றி கனியை சுவைத்தது.

சொதப்பல்

சொதப்பல்

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஓப்பனிங் வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் சாஹா களமிறங்கினர். இதில் அன்ரிச் நார்ட்ஜே வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வார்னர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சாஹாவும் 18 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் 18 ரன்களிலும் மனிஷ் பாண்டே 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் 61 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறியது.

ஜாதவின் விக்கெட்

ஜாதவின் விக்கெட்

இதனையடுத்து அணியை காப்பாற்றுவதற்காக 5வது விக்கெட்டிற்கு கேதர் ஜாதவ் களமிறங்கினார். 8 பந்துகளை சந்தித்த ஜாதவ் 3 ரன்களை அடித்திருந்தார். அப்போது ஆன்ரிச் நாட்ர்ஜே வீசிய 13வது ஓவரில் ஜாதவ் எல்பிடபுள்யூ அவுட்டானார். பந்து நேரடியாக மிடில் ஸ்டம்பை நோக்கி சென்றிருந்ததால் அம்பயர் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்தார்.

ஜாதவின் மன உறுதி

ஜாதவின் மன உறுதி

ஆனால் கேதர் ஜாதவ் மிகப்பெரும் மன உறுதியுடன் மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். அதில் பந்து காலில் பட்டது தெளிவாக இருந்ததால், மூன்றாம் நடுவரும் அதை அவுட் என அறிவித்தார். ஐதராபாத் அணி மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் போது 36 வயதாகும் அனுபவ வீரர் ஜாதவ், இப்படியா ரிவ்யூவ் எடுத்து வேஸ்ட் செய்வது என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

கேதர் ஜாதவ் க்ளீன் அவுட் என்பது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் தெளிவாக இருந்தது. அம்பயர், சக வீரர்கள் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் மிகப்பெரிய தைரியத்துடன் அவர் ரிவ்யூவ் கேட்டுள்ளார். அப்படிபட்ட தைரியத்தை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

லாராவின் விமர்சனம்

லாராவின் விமர்சனம்

ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர் பிரைன் லாராவும் கிண்டலடித்துள்ளார். அந்த சமயத்தில் கமெண்ட்டரி செய்து கொண்டிருந்த லாரா, அந்த பந்தை எல்லாம் அவர் எதற்கு ரிவ்யூவ் செய்தார்?... நேரடியாக வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் நடுவர்களிடம் ரிவ்யூவ் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது புரியாமல் குழம்பியிருந்தேன் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 8 - October 20 2021, 07:30 PM
இலங்கை
அயர்லாந்து
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fans slam Kedar Jadhav after he wasting review against DC in IPL 2021
Story first published: Thursday, September 23, 2021, 12:14 [IST]
Other articles published on Sep 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X