For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதனால தான் தவான் ஸ்பெஷல்.. ஜாம்பவான் கூறிய அந்த வார்த்தைகள்.. ரசிகர்கள் பாராட்டு மழை!

அகமதாபாத்: ஷிகர் தவான் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தாலும், ஒரு விஷயம் மட்டும் அவரிடம் வரவே இல்லை என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இருந்த நம்பிக்கையும் போச்சு அதிரடி வீரருக்கான காத்திருப்பு வீணானது..ராஜஸ்தான் அணிக்கு இடி மேல் இடி இருந்த நம்பிக்கையும் போச்சு அதிரடி வீரருக்கான காத்திருப்பு வீணானது..ராஜஸ்தான் அணிக்கு இடி மேல் இடி

டெல்லி அணியின் வெற்றிக்கு ஷிகர் தவானின் அசத்தல் அரை சதம் முக்கிய காரணமாக அமைந்தது. இதற்காக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறக்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா கூட்டணி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தது. ப்ரித்வி ஷா (39) விக்கெட்டை இழந்தார்.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இதன்பின் வந்த ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், பஞ்சாப் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் இந்த தொடரில் இதுவரை 380 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராகவும் திகழ்கிறார்.

அது இல்லை

அது இல்லை

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கவாஸ்கர், இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஷிகர் தவான் அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவர் அந்த ஃபார்மை தொடர்ந்து எடுத்து செல்கிறார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், அந்த மிதப்பில், சில தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் ஷிகர் தவான் அப்படி ஏதுமே செய்யவில்லை. அதனால்தான் அவர் ஸ்பெஷல்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

அவரின் ஷாட்களை பாருங்கள், ஷிகர் தவான் எப்போதும் ரன்கள் அடிக்க தனது வழக்கமான ஷாட்களையே பயன்படுத்துகிறார். எந்த போட்டிக்காகவும் வித்தியாசமாக செய்ய முயற்சிக்கவில்லை. அவர் இந்த ஷாட்களையே டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் பயன்படுத்துகின்றார். அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது பல கோடிகள் ஊதியம் வாங்குவதற்கு தகுதியானவர் போன்று தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 3, 2021, 21:01 [IST]
Other articles published on May 3, 2021
English summary
Gavaskar Praises Dhawan’s match-winning knock vs PBKS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X