யப்பா! இப்படி ஒரு அடியா..பொல்லார்ட் அடித்த ஒற்றை சிக்ஸர்..மைதானத்தில் இருந்த அனைவருக்கும் வியப்பு

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட் அடித்த காட்டடி சிக்ஸர் எதிரணி வீரர்கள் உட்பட அனைவரையும் வாய்ப்பிழக்க வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 151 ரன்களை ஐதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

என்ன தப்பு செய்தார்?.. நடராஜனை நீக்கிய வார்னர்.. பின்னணியில் என்ன நடந்தது - இதுதான் காரணம்!

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, குயிண்டன் டிகாக் முதல் ஓவர் முதலே அதிரடி காட்டினர். முதல் 6 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அஹ்மது, அபிஷேக் சர்மா என 4 பவுலர்களின் பந்துவீச்சையும் துவம்சம் செய்தனர். இதனால் பவர் ப்ளே ஓவரின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்களை எடுத்தது.

கடும் பிரஷர்

கடும் பிரஷர்

இதனால் மும்பை 20 ஓவர்களில் பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கர் அடுத்தடுத்து ரோகித் சர்மா (32), சூர்யகுமார் யாதவ் (10) 2 விக்கெட்களை எடுத்து அசத்தினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய குயிண்டன் டிகாக் -ம் 40 ரன்களுக்கு வெளியேறிய அதன் பின்னர் வந்த வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

 வியப்பூட்டிய சிக்ஸர்

வியப்பூட்டிய சிக்ஸர்

ஆனால் மும்பை அணி ஸ்கோர் கெய்ரின் பொல்லார்ட் கடைசி சில ஓவர்களில் காட்டிய அதிரடியால் உயர்ந்தது. குறிப்பாக அவர் அடித்த ஒரு சிக்ஸர் அனைவரையும் வாய்ப்பிழக்க செய்துள்ளது. முஜ்ஜீப் உர் ரஹ்மான் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை பொல்லார்ட் கடும் பிரஷருக்கு நடுவே லாங் ஆன் திசையில் விளாசினார். அவரின் காட்டடியால் அது 105 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸராக அமைந்தது. இந்த சீசனின் மிக தூரமான சிக்ஸர் இதுவே ஆகும். இதற்கு முன்னர் க்ளென் மேக்ஸ்வெல் 100 மீட்டர் சிக்ஸரை அடித்திருந்தார்.

மும்பையை மீட்ட பொல்லார்ட்

மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் கெயிரின் பொல்லர்ட் தொடர்ந்து அதிரடி காட்டினார். 22 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என இக்கட்டான நேரத்தில் 35 ரன்களை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kieron Pollard hits a huge 105 meter six off which longest in this season - Video
Story first published: Saturday, April 17, 2021, 21:47 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X